Roasted Garlic (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 30, சென்னை (Health Tips): வறுத்த பூண்டை எண்ணெய் இல்லாமல் தீயில் சுட்டு சாப்பிடுவதே நல்லது. முந்தைய காலங்களில் விறகு அடுப்பு பயன்பாட்டில் இருந்ததால், பூண்டை (Garlic) சுட்டு சாப்பிட்டு வந்தனர்.

இன்றளவில் கியாஸ் பயன்பாடு என்பது வந்துவிட்டது. அவற்றில் பூண்டை சுடுவது நல்லதல்ல. வழியில்லாதவர்கள் அதனை பயன்படுத்தி கொள்ளலாம். இரும்பு தோசைக்கல் மீது பூண்டை வைத்து சுட்டு சாப்பிடலாம்.

பூண்டை காலையில் வெறும் வயிற்றில் சுட்டு சாப்பிடலாம். இரவு நேரத்தில் உணவு எடுத்துக்கொண்ட பின் 20 நிமிடம் கழித்து பூண்டு சாப்பிடலாம். மிதமான சூடுள்ள நீரை குடிக்கலாம்.

தினமும் 5 - 6 வறுத்த பூண்டை சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவி செய்யும். நமது உணவில் இருக்கும் நல்ல சத்துக்களை பிரித்து வழங்கும். உடலில் இருக்கும் கேடான நீர் மற்றும் கொழுப்புகளை வெளியேறும். Mother Cat Cute Recover Baby Cat: எங்க போயி இருந்த?.. தனது குட்டியை ரைட்-லெப்ட் வாங்கிய தாய் பூனை.. கியூட் வீடியோ உள்ளே.! 

இதில் இருக்கும் ஆண்டி-பாக்டீரியல் தன்மை கேடான பாக்டீரியாக்களை வெளியேற்றும். இதனால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். புற்றுநோய் செல்களை அழிக்கும். இதயத்தின் தமணியை பாதுகாக்கும்.

எலும்புகளின் திடத்தன்மையை மேம்படுத்தி, அதன் நலனை பாதுகாக்கும். உடலில் இருக்கும் செல்களை புதுப்பிக்கும். சோர்வு பிரச்சனை சரியாகும். உடலில் மறைவாக தேங்கியுள்ள வாயுக்களையும் வெளியேற்றும்.

இதய நோய், மாரடைப்பு, இரத்த அழுத்தம் பிரச்சனைகள் சரியாகும். உடல் எடை விரைந்து குறையும். தேமல் பிரச்சனை கொண்டிருப்பவர்கள் பூண்டு - வெற்றிலை சேர்த்து அரைத்து தேய்க்கலாம்.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 6 - 7 பூண்டு பற்களை பாலில் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். இது நல்ல பலனை வழங்கும். ஒருசில நேரம் அதிகமாக இரவில் உணவு சாப்பிட்டு, செரிமான பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு பூண்டை சுட்டு சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.