ஜனவரி 30, இந்தியானா (World News): அமெரிக்காவில் உள்ள இன்டியானா மாகாணம், மேற்கு லஃபாயெட் நகரில் செயல்படும் புர்டியு பல்கலைக்கழகத்தில் (Purdue University, Indiana) பட்டம் பயின்று வரும் இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா (Neel Acharya). இவர் கடந்த ஜனவரி 28ம் தேதி முதல் மாயமானதாக கூறப்படும் நிலையில், இந்த விஷயம் தொடர்பாக அவரது தாயார் கௌரி ஆச்சார்யா காவல்துறையினரின் உதவியை நாடினார்.
கல்லூரி வளாகத்தில் சடலம் மீட்பு: இதுகுறித்து சிகாகோ இந்திய தூதரகத்திலும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அதிகாரிகளின் வேண்டுகோளின் பேரில் புகார் பெறப்பட்டு நீல் ஆச்சார்யாவை தேடி வந்தனர். இந்நிலையில், அவர் கல்லூரி வளாகத்தில் உயிரிழந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார். அவரின் மரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். Minor Girl Raped: 13 வயது சிறுமியை வீடுபுகுந்து பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்; தண்ணீர் குடிக்க வேண்டும் என கேட்டு நடந்த பயங்கரம்.!
ஜியார்ஜியாவை தொடர்ந்து இன்டியானாவில் பகீர் சம்பவம்: கடந்த வாரம் ஜியார்ஜியாவில் உள்ள கடை ஒன்றில் பகுதி நேர வேலை பார்த்து பட்டம் பயின்று வந்த மாணவர் விவேக் ஷைனி (26) என்பவர், உள்ளூரைச் சார்ந்த வீடு இல்லாத நபரால் சுத்தியலால் 50க்கும் மேற்பட்ட முறைகள் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதனிடையே தற்போது அடுத்த இந்திய மாணவர் மர்மமான முறையில் அமெரிக்காவில் உயிரிழந்திருக்கிறார்.