ESA Satellite (Photo Credit: @ESAOperations X)

பிப்ரவரி 22, சென்னை (Technology News): வானியல் தொடர்பான ஆராய்ச்சி, எதிர்கால மின்னணு சாதனங்களின் பயன்பாடு, அதிநவீன சேவை உட்பட பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு தொடர்ந்து உலகில் உள்ள பல்வேறு நாடுகள் செயற்கைகோள்களை (Satellite) ஏவி வருகிறது. இவை தனது பயன்பாட்டை நிறைவுசெய்தபின் விண்வெளியில் சுற்றி வருகிறது. இவ்வாறான செயற்கைகோள் எதிர்காலத்தில் பூமியின் வளிமண்டலப்பாதையில் நுழைந்து, புவியின் ஏதேனும் ஒரு பகுதியில் விழும் வாய்ப்பும் உள்ளன.

விண்ணுக்கு சென்றது மீண்டும் தாயகம் திரும்புகிறது: கடந்த 1995ம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency ESA) சார்பில், பூமியின் வளிமண்டலத்தை கண்காணிக்க கயானா விண்வெளியில் நிலையத்தில் இருந்து, செயற்கைகோள் ஒன்று விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் தரவுகள் வழங்கிய துல்லியத்தை சாராம்சம், பல எதிர்கால திட்டங்களை வகுக்கவும் காரணமாக அமைந்தது. இது 2.5 டன் எடை கொண்டது ஆகும். பல ஆண்டுகளாக செயல்பாட்டில் இருந்த செயற்கைகோள், தனது வாழ்நாட்களை நிறைவு செய்தது. Mine Landslide 30 Died: நொடியில் 30 பேரின் உயிரை காவு வாங்கிய மண்சரிவு; நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்.. மண்ணோடு மண்ணாக புதைந்த பணியாளர்கள்.!

பசுபிக்கில் விழுந்து நொறுங்கும்: இதனால் இந்த செயற்கைகோள் புவியின் வளிமண்டல சுற்றுப்பாதையில் நுழைந்து, புவியின் மீது விழுந்து முதலாம் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், செயற்கைகோள் பூமியின் சுற்றுவட்ட பாதைக்குள் நுழைந்து, கட்டுப்பாட்டை இழந்து கடலில் மோதி மூழ்க வேண்டும் என விஞ்ஞானிகள் குழுவால் கண்காணிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நேரப்படி மாலை 05:17 மணிக்கும் (இந்திய நேரப்படி 10:47 இரவு) பசுபிக் பெருங்கடலில் அலாஸ்கா - ஹவாய் தீவுகள் பகுதியில் வளிமண்டலத்தை கடந்து செயற்கைகோள் புவிக்குள் நுழையும். பசுபிக் பெருங்கடலின் நடுவே செயற்கைகோள் விழுந்து நொறுங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணில் சுற்றிவரும் செயற்கைகோள், புவியின் சுற்றுவட்ட பாதையை கடந்து வளிமண்டலத்திற்குள் வந்ததும் கீழே விழும் வேகத்தில் தீப்பிடித்து எரியத்தொடங்கிவிடும். இதனால் செயற்கைகோள் பல பாகங்கள் எரிந்து சாம்பலாகி, எஞ்சிய பாகங்கள் நிலப்பரப்பு அல்லது கடலின் மீது விழும்.