Venezuela's La Paragua Mine Collapse (Photo Credit: @Sprinter99800 X)

பிப்ரவரி 22, வெனிசுலா (World News): தென் அமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில், சட்டவிரோதமாக குற்றவழக்குகளில் ஈடுபடும் கும்பலால் சுரங்கங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.23 மாநிலங்க, 2.8 கோடி மக்கள் தொகை என சிறிய நாடாக இருந்தாலும், அங்கு சட்டம் - ஒழுங்கு பிரச்சனை முக்கிய தலைவலியாக அந்நாட்டு அரசுக்கும் இருந்து வருகிறது.

குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் சுரங்கம்: இந்நிலையில், குற்றச்செயலில் (Venezuela Mine Collapse) ஈடுபடும் கும்பல் கைவசம் இருந்த சுரங்கம் ஒன்றில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டு 30 பேர் பலியான சோகம் நடந்துள்ளது. வெனிசுலாவில் உள்ள பொலிவர் மாகாணம், லா பரகுவா பகுதியில் புல்லா லோகா என்ற சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தை அரசுக்கு எதிரான கும்பல் கட்டுப்படுத்தி வருகிறது. Car Fall into Valley: அப்பளம் போல நொறுங்கிய கார்; கர்ப்பிணி பெண் உட்பட 6 பேர் என குடும்பமே பலி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்.! 

மண்சரிந்து பயங்கர விபத்து: இன்று காலை சுரங்கத்தில் வழக்கம்போல தொழிலாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருந்த நிலையில், திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் 35 மீட்டர் ஆழத்தில் பல தொழிலாளர்கள் புதையுண்டு போயினர். விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், தற்போது மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

பதறவைக்கும் காட்சிகள் வெளியானது: நொடியில் நடந்த விபத்தின் பதைபதைப்பு காட்சிகள் அங்கிருந்த ஒருவரால் எதற்ச்சையாக படம் பிடிக்கப்பட்டபோது பதிவாகி இருக்கிறது. தற்போது வரை 30 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், 100 க்கும் மேற்பட்டோர் மண்ணிற்கு அடியில் சிக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.