
ஜூன் 10, சென்னை (Technology News): பிரபல செயற்கை நுண்ணறிவு தளமான ஓபன் ஏஐ சாட்ஜிபிடி மக்களுக்கு பல வகையில் உதவி செய்து வருகிறது. மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும், நாம் தெரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களை எளிமையாக கற்றுக் கொள்வதற்கும் இது உதவுகிறது. மேலும் ஆங்கிலம் மட்டுமல்லாது இதர மொழிகளை கற்றுக்கொள்வதிலும் இதன் பங்கு அதிகம் என்று தான் கூற வேண்டும். ஆற்றில் குளிக்கச் சென்றவர்களுக்கு நேர்ந்த சோகம்.. 8 பேர் பலி.. கண்ணீரில் உறவினர்கள்.!
பயனர்கள் கவலை :
இந்த நிலையில் சாட்ஜிபிடி இன்று உலகம் முழுவதும் முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மதியம் 2 மணியளவில் இந்த பிரச்சனை தொடங்கிய நிலையில், பலரும் தளத்தை உபயோகிக்க முடியவில்லை என புகார் கூறி வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை எனினும், இந்த பிரச்சனையை சரி செய்யக்கோரி பயனர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கவலையுடன் பதிவிட்டு வருகின்றனர்.
சமூகவலைத்தளங்களில் கவலையை பதிவு செய்யும் பயனர்கள் :
How life feels when ChatGPT is down pic.twitter.com/zbEkf0USEP
— Aditi. (@Sassy_Soul_) June 10, 2025
பயனர்கள் குமுறல் :
ChatGPT Users when ChatGPT is down:- pic.twitter.com/Fwk3RxMSbp
— Pintu (@Pintuu0) June 10, 2025