Online Scam | Google Play Store (Photo Credit: Pixabay / WIkipedia)

டிசம்பர் 09, புதுடெல்லி (New Delhi): சமூக வலைத்தளங்களில் சிறுகடன், வட்டியில்லாத கடன், உடனடி கடன் என பல பெயர்களில் லோன் வழங்கும் செயலிகள் குறித்த விளம்பரங்கள் அதிகம் வந்திருந்தன. அவசர தேவைக்காகவும், அத்தியாவசியத்திற்காகவும் என இந்த செயலிகளை பயன்படுத்தி கடன் பெற்றோர், பல வகைளில் துன்புறுத்தப்பட்டனர்.

உடனடி கடன்., அதிக வட்டி: குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் முதல் கோடிகள் வரை பணம் தேவைப்பட்டோர் கடன்பெற்றனர். கடனை உடனடியாக கொடுத்த நிறுவனங்கள், அதற்கான கால நிர்ணயமாக 90 நாட்கள் வரை வரம்பு உள்ளதாக முதலில் தெரிவிப்பார்கள். அதனைத்தொடர்ந்து, கடனை பெற்ற 5 நாட்களிலும் 160 மடங்கு முதல் 360 மடங்கு வரை அதிக வட்டி நிர்ணயித்து பணத்தை திரும்ப செலுத்த வற்புறுத்துவார்கள்.

மிரட்டல் சம்பவங்கள்: இவர்களின் செயலியை பதிவிறக்கம் செய்ததும் நமது தனிப்பட்ட விபரங்கள் திருடப்பட்டுவிடும் என்பதால், நமது அலைபேசியில் பதிவு செய்து வைத்த நபர்களின் விபரத்தை தெரிந்துகொண்டு, அவர்களுக்கு தொடர்புகொண்டு நம்பைப்பற்றி கூறுவதும், நமது போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து மிரட்டுவதும் என சர்ச்சைகள் தொடர்ந்து வந்தது. இதனால் பலரும் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்டனர். Women Injured Gun Shot Video: சேதுபதி திரைப்பட பாணியில் நிஜத்தில் பகீர் சம்பவம்: பெண்ணின் தலையில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்து பயங்கரம்.. காவல் நிலையத்தில் அதிர்ச்சி.! 

17 செயலிகள் நீக்கம்: இந்நிலையில், கூகுள் தனது பிளே ஸ்டோரில் இருந்து 17 லோன் மோசடி சார்ந்த செயலிகளை தடை செய்து உத்தரவிட்டு இருக்கிறது. இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்தோரை குறிவைத்து, அவர்களின் தனிப்பட்ட தரவுகளை சேகரித்த, மிரட்டலில் ஈடுபட்ட செயலிகள் குறித்து கிடைக்கப்பெற்ற புகார்களின் அடிப்படையில் கூகுள் நடவடிக்கை எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட செயலிகள் விபரங்கள் பின்வருமாறு.,

1) ஏஏ க்ரெடிட் (AA Kredit)

2) அமோர் கேஷ் (Amor Cash)

3) குயாபா கேஷ் (Guayaba Cash)

4) எஸ் க்ரெடிட் (Easy Credit)

5) கேஷ் வாவ் (Cashwow)

6) க்ரெடிபஸ் (CrediBus)

7) பிளாஷ் லோன் (Flash Loan)

8) பிரெஸ்டமோஸ் கிரெடிடோ (Préstamos Crédito)

9) கோ கிரெடிடோ (Go Crédito)

10) கார்டேரா கிராண்டே (Cartera Grande)

11) ரேபிடோ கிரெடிடோ (Rápido Crédito)

12) பினுப் லெண்டிங் (Finupp Lending)

13) போர்எஸ் கேஷ் (4S Cash)

14) ட்ரு நிரா (True Naira)

15) ஈஸி கேஷ் (Easy Cash)

16) இந்டண்டானியோ  பிரேஷ்டமோ (Instantáneo Préstamo)

17) பிரஸ்டமோஸ் டி க்ரெடிடோ யுமி கேஷ்( Préstamos De Crédito-YumiCash)

சட்ட நடவடிக்கைக்கு அறிவுறுத்தல்: இந்த செயலிகள் நமது செல்போனில் தரவிறக்கம் செய்யப்பட்டு இருந்தால், அதனை நீக்கிவிடுமாறும் கூகுள் கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல, மேற்கூறிய செயலிகளால் யாரேனும் பாதிக்கப்பட்டு இருந்தாலும், புகார் அளித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.