அக்டோபர் 05, புதுடெல்லி (Technology News): ஐசிசி ஆடவர் உலகக்கோப்பை 2023 (ICC Men's Cricket World Cup 2023) போட்டி, இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து, இந்திய நேரப்படி நண்பகல் 02:00 மணிக்கு தொடங்குகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து (New Zealand Vs England) அணிகள் மோதுகின்றன.
10 நாடுகள் கலந்துகொள்ளும் ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பை 2023 போட்டியை, நடப்பு ஆண்டில் இந்தியா தனி நாடாக தொகுத்து வழங்குகிறது. போட்டியின் முடிவில் வெற்றிபெறும் அணிக்கு 4 இலட்சம் அமெரிக்கா டாலர் பரிசாக வழங்கப்படும்.
அக்.05ம் தேதி தொடங்கும் இப்போட்டி, தொடர்ச்சியாக 46 நாட்கள் 48 போட்டிகளாக நடைபெறுகின்றன. இந்தியாவில் உள்ள அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, புதுடெல்லி ஆகிய நகரங்களில் உள்ள கிரிக்கெட் மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. Sikkim Cloud Burst: மேகவெடிப்பால் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம்: 14 பேர் பலி., 102 பேர் மாயம்.. சிக்கிம் அரசு அறிவிப்பு.!
போட்டியை நேரில் பார்ப்பதற்கான நுழைவுசீட்டு விற்பனை பல்வேறு மைதானங்களில் நடைபெற்று முடிந்துள்ளன. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலான கிரிக்கெட் ரசிகர்களும் போட்டியை நேரில் பார்த்து க்கூண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தேவையான முன்னேற்பாடுகளை ஐசிசி மற்றும் பிசிசிஐ நிர்வாகம் செய்துள்ளது.
இந்நிலையில், நேற்று இப்போட்டியில் கலந்துகொள்ளும் 10 அணிகளின் தலைவர்களும் ஒருங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகின. இன்று போட்டி தொடங்கவுள்ளதை வரவேற்கும் பொருட்டு, கூகுள் தனது டூகுலை மாற்றி இருக்கிறது.
கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியை தனது பாணியில் வரவேற்ற கூகுள்..
இன்று மதியம் 02:00 மணிக்கு குஜராத்தில் தொடங்குகிறது போட்டித்தொடர்..#WorldCup2023 | #LatestLY_Tamil | #Google | #ENGVsNZ pic.twitter.com/Fa0ymqu58M
— Sriramrpckanna (@Sriramrpckanna1) October 5, 2023