WhatsApp (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 26, குருகிராம் (Technology News): தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை தவறான வகையில் பயன்படுத்தி, மக்களின் அறியாமையை தங்களுக்கு சாதகமாக்கி மோசடி செயல்களில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்த நபருக்கு வாட்ஸப்பில் மர்ம நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதனை நம்பியவரும் அவர்களின் ஆசை வார்த்தையில் விழுந்து இருக்கிறார்.

ரூ.8.50 இலட்சம் மோசடி: அதன்படி மர்ம நபர்கள் முதலீடு செய்தால் ஒரே மாதத்தில் இரட்டிப்பு தொகை என வலைவிரித்து ரூ.8.50 இலட்சம் பணத்தை பறித்துள்ளனர். அவர்கள் கூறியபடி எந்த விதமான தொகையும் வழங்கப்படவில்லை. ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நபர், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். Kakinada Accident: லாரி டயர் பஞ்சரை சீர்செய்த தொழிலாளர்கள் 4 பேர் உடல் நசுங்கி பலி; பேருந்து மோதியதால் சோகம்.! 

4 பேர் கும்பல் கைது: புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து அதிகாரிகள் ஹரியானா கைதல் பகுதியை சேர்ந்த சந்தர் பிரகாஷ் திவாரியை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையின் பேரில், அவரின் கூட்டாளிகள் அங்கித், நிதின் குமார், அபினவ் ஆகியோரை கைது செய்தனர்.

சீன நபருக்கு பணம் அனுப்பிவைப்பு: இவர்களிடம் நடந்த விசாரணையில் ஆன்லைனில் குழுவை உருவாக்கி, அதிக முதலீடு என டாஸ்க் செய்ய வற்புறுத்தி அதன் பேரில் ஆசை வார்த்தை கூறி பணம் பறித்தது தெரியவந்தது. இந்த கும்பலிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது. மேலும், இவர்களிடம் இருந்து ரூ.15 கோடி பணம் சீன நபரின் வங்கிக்கணக்குக்கும் பகிரப்பட்டுள்ள்ளதால், மேற்படி தீவிர விசாரணையை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.