பிப்ரவரி 26, காக்கிநாடா (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள காக்கிநாடா - சின்னம்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த லாரி ஒன்று, இன்று அதிகாலை டயர் வெடித்ததன் காரணமாக ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அச்சமயம், இவ்வழித்தடத்தில் ஆர்.டி.சி பேருந்து வந்த நிலையில், லாரிக்கு பஞ்சர் ஓட்டும் பணியில் லாரி ஓட்டுநர் உட்பட சிலர் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது, ஆர்.டி.சி பேருந்து லாரியின் மீது மோதி விபத்திற்குள்ளாகவே, லாரியின் அடியில் இருந்த பணியாளர்கள் 4 பேரின் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு, பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசு பேருந்தை காவல் துறையினர் துரத்திப் பிடித்தனர். Nayanthara Wishes to Samantha: சமந்தாவுக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்த நயன்தாரா: காரணம் இதுதான்.. குவியும் பாராட்டுக்கள்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)