Cyber Crime (Photo Credit: Pixabay)

மார்ச் 13, புதுடெல்லி (New Delhi): தொழில்நுட்ப உலகத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து வருகிறது. தொழில்நுட்பங்கள் குறித்து அறிமுகம் இல்லாத நபர்களை குறிவைத்து அதிக மோசடிகள் முன்பு நடந்தன. ஆனால், இன்றளவில் அவற்றின் நிலை என்பது மாறி, நாம் தேடும் தகவலை வைத்தும், போலியான இணையதளங்களை உருவாக்கி வங்கிக்கணக்கின் விபரத்தை பெற்று மோசடிகள் தொடருகின்றன. இந்நிலையில், ரெட்டிட் (Reddit) பக்கத்தில் தோழி ஒருவர் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தது தொடர்பாக, நபர் ஒருவர் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பெண் ஒருவர், தனது வீட்டின் மின்கட்டணத்தை செலுத்த முயற்சித்துள்ளார். அவரின் செல்போனில் இருக்கும் செயலிகள் எதோ ஒரு குறைபாடு காரணமாக, அந்த சமயத்தில் செயல்படவில்லை. இதனால் கூகுள் பக்கத்திற்கு சென்று, குறிப்பிட்ட இணையத்தை தேடி இருக்கிறார். AC Compressor Exploded: ஏசி பழுதுபார்த்தவருக்கு காத்திருந்த சோகம்.. கம்ப்ரஸர் வெடித்து ஊழியர் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.! 

ரூ.1000 தொகைக்கு ரூ.54 ஆயிரம் இழந்த பெண்:

அப்போது, பெண் ஆன்லைனில் வந்த பக்கம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட தகவலை நம்பி, அவரின் வங்கிக்கணக்கு உட்பட ஏ.டி.எம் நம்பரை பயன்படுத்தி இருக்கிறார். பெண் 20 ஆஸ்திரேலிய பணம் 20 AUD (இந்திய மதிப்பில் ரூ.1090) செலுத்த வேண்டும் என்ற இல்லை இருந்துள்ளது. பெண்ணும் அதனை செலுத்தியுள்ளார். பின் திடீரென அவரின் கணக்கில் இருந்து 1000 ஆஸ்திரேலிய பணம் (இந்திய மதிப்பில் ரூ.54000) எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்மணி வங்கிக்கணக்கில் இணையவழி சேவைகளை உடனடியாக முடக்கிவிட்டு, அதிகாரிகளிடம் சென்று புகார் அளித்தார். அப்போது, அவர் பயன்படுத்திய இணையத்தளம் போலியானது என்பது உறுதியான நிலையில், அவரின் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு, இந்திய வங்கிக்கணக்கு பக்கத்துக்கு பணம் மாறியது தெரியவந்தது. தற்போது பெண்மணி பணத்தை மீட்டுத்தர புகார் அளித்துள்ளார். மேலும், தனக்கு நடந்த மோசடி தொடர்பாக நண்பரிடம் பகிர்ந்துள்ளார்.

தண்டனைகள் கடுமையாக வேண்டும்:

அவர் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இத்தகவலை பகிர்ந்து இருக்கிறார். நாம் பணம் செலுத்தும் விபரங்களை பதிவு செய்யும் இணையத்தளம் உண்மையில் அதிகாரபூர்வமானதா? என சோதித்து செயல்படுவது நல்லது. அவசரத்தில் நாம் செய்யும் சிறுவிஷயமும் நமக்கு பாதகமாக முடியும். நம்மை ஏமாற்றும் கும்பலுக்கு எந்த விதமான கவலையும் இல்லாமல் இருப்பார்கள். அவர்களின் மோசடியில் ரூ.10 கிடைத்தாலும், செலவுக்கு ஆகும் என்றே யோசிப்பார்கள். சைபர் குற்றங்களுக்கான தண்டனைகள் இனி வரும் நாட்களில் கடுமையாக்கப்படவேண்டும்.