ஜனவரி 08, பெங்களூர் (Bangalore): இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில், உலகின் மிகவும் தாழ்வான தீவு நாடு பட்டியலில் உள்ளது மாலத்தீவுகள் (Maldives). அந்நாட்டின் பொருளாதாரத்தின் மூன்றில் ஒருபங்கு என்பது சுற்றுலாவை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி இருக்கிறது. அந்நாட்டில் உள்ள மக்களின் 70% வேலைவாய்ப்பு சுற்றுலாவை மையமாக வைத்து காலத்தை நகர்த்த உதவுகிறது.
திரை பிரபலங்களின் இன்பச்சுற்றுலா பயணம்: மாலத்தீவுகளுக்கு இந்தியர்கள் அதிகளவில் சென்ற வருவது உண்டு. குறிப்பாக திரைத்துறை பிரபலங்கள், செல்வந்தர்கள் தங்களின் விடுமுறை காலத்தினை இன்பமாக கொண்டாடவும், தேனிலவு போன்ற விஷயங்களுக்கும் மாலத்தீவுகளுக்கு சென்ற மகிழ்ச்சியாக இருப்பார்கள். கடந்த ஓராண்டில் மட்டும் மாலத்தீவுகளுக்கு 2,09,198 இந்தியர்கள் சென்ற வந்துள்ளனர். அதேபோல, 2,09,146 ரஷியர்களும், 1,87,118 சீனர்களும் சென்ற வந்துள்ளனர். மாலத்தீவின் மொத்த மக்கள் தொகையே ஐந்து லட்சம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. Mother Killed by Son: பணம் தர மறுத்த தாயை மானபங்கப்படுத்தி, கொலை செய்த கொடூர மகன்: நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி சம்பவம்.!
இலட்சத்தீவுகளுக்கு சென்ற பிரதமர் மோடி: இந்நிலையில், சமீபத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் இலட்சத்தீவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு, அதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த காணொளிகள் வைரலாகி இருந்தது. இதனை மேற்கோளிட்ட சில மாலத்தீவு எம்.பிக்கள், தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான சர்ச்சை கருத்துக்களை பதிவு செய்தனர்.
மாலத்தீவு எம்.பி-களால் தொடங்கிய கருத்து மோதல்: இதனால் இணையவழியில் மாலத்தீவு - லட்சத்தீவு கருத்து மோதல் இந்தியர்களிடையே அதிகரித்தது. இந்தியர்கள் மாலத்தீவுகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பல ஆதங்க குரல்கள் எழும்ப, பலரும் அதற்கு ஆதரவுகளை தெரிவித்ததால் வார்தைப்போர் முற்றியது. இந்த விவாதம் கடுமையான நிலையில், மாலத்தீவு அரசின் முக்கிய இணையப்பக்கங்கள் அடுத்தடுத்து முடங்கின. இதனையடுத்து, விபரீதத்தை உணர்ந்த மாலத்தீவு அரசு, 3 எம்.பிக்களை தற்காலிகமாக பணிநீக்கம் செய்தது. iPhone Survives 16,000 Feet Drop: 16,000 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ஐபோன்... ஒரு ஸ்க்ராட்ச் கூட இல்லாமல் பத்திரமாக மீட்பு..!
இலட்சத்தீவுகள் மீது திரும்பிய இந்தியர்கள் பார்வை: சமீபகாலமாகவே மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வருவது நடைபெற்று வந்தது. அங்குள்ள மக்களும், அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் அதுசார்ந்த கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அதனால் ஏற்பட்ட விளைவே தற்போதைய வெளிப்பாடாக அமைந்துள்ளது. இதனால் இந்தியர்கள் மாலத்தீவு பயணங்களை தவிர்த்து, லட்சத்தீவுகளின் அழகை தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு செய்தனர். இன்று மாலத்தீவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரி, அந்நாட்டு அரசுத்துறை அதிகாரிகளை மேற்கூறிய விஷயம் தொடர்பாக பேச நேரில் சந்திக்கவும் செய்கிறார்.
ஆன்லைன் புக்கிங் நிறுவனங்களின் அதிரடி: இந்நிலையில், ஈஸ் மை ட்ரிப் (Ease My Trip) செயலியின் இணை நிறுவனர் பிரசாந்த் பிட்டி, தனது நிறுவனம் மாலத்தீவுகளுக்கு தற்காலிகமாக சுற்றுலாப் பயணிகள் மேற்கொள்ளும் முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்திருக்கிறார். மாலத்தீவு எம்பி பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து முன்வைத்த விமர்சனத்தை தொடர்ந்து, முன்பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், "எப்போதும் தேசம் தான் முக்கியம், வணிகம் என்பது அதற்குப் பின் தான்" என்று தனது ஆழமான கருத்துக்களை தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்திற்கு பின்னர், அங்கு சுற்றுலா செல்ல மட்டுமல்லாது, அது சார்ந்த விஷத்தை தெரிந்துகொள்ள இணையத்தில் பலரும் தேடி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
உங்களின் பாதையை நீங்கள் தேர்ந்தெடுங்கள்: வெளிநாடுகளில் இருக்கும் சுற்றுலாத்தலங்களை போல, நமது நாட்டிலும் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. உலகளவில் உள்ள வியக்கவைக்கும் விஷயங்கள் அனைத்தும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் ஒருங்கே அமைந்துள்ளன. அவற்றை நாம் தேடிப்போனாலே நமது வாழ்நாட்கள் போதாது. சுற்றுலா அவரவரின் தனிப்பட்ட விருப்பம் என்பதால், உங்களின் பயணத்தில் எந்த பிரச்சனைக்கும் இடம் கொடுக்காமல், உங்களை நீங்கள் தெரிந்துகொள்ள, உங்களின் பாதையை நீங்கள் தேர்வு செய்யுங்கள்.
Next travel destination, Lakshadweep 💖💖💖#Lakshadweep #lakshadweepislands #lakshadweeptourism #Modi #BoycottMaldives #Maldives pic.twitter.com/6KMXC5oGUB
— Ramesh Reddy ✍️ 🇮🇳 (@RameshReddyHind) January 7, 2024
இலட்சத்தீவு இந்தியாவின் அழகு:
No true Indians will pass this tweet without liking 💯💯
This is neither Bali nor Maldives 🤭👎👎
This is in India 🇮🇳🇮🇳🇮🇳
Absolutely🌼
It is lakshadweep 🌊🌱
Blue water and white sand beaches 💥💯🧊🏖️🏝️#LakshadweepTourism#MaldivesOut #Lakshadweep pic.twitter.com/Ocro72VfSm
— Vijay_GreZz (@Vijayjo98603097) January 8, 2024