மார்ச் 26, மெகபூபாத் (Telangana News): கோடைகாலம் தொடங்கிவிட்டாலே, வெயிலின் தாக்கம் என்பது கடுமையான அளவு அதிகரித்துவிடும். அதனை கட்டுப்படுத்த பலரும் கருப்புச்சாறு வாங்கிகுடிக்க, சாலையோர கரும்புச்சாறு கடைகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இயந்திரத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும் சாறு உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும். அதேநேரத்தில், கரும்பு இயந்திரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையேல் கைகள் அதில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தும் உண்டு. Thoothukudi Shocker: 17 வயது சிறுமி எரித்துக்கொலை முயற்சி; காதலன் உட்பட இருவர் கைது.. தூத்துக்குடியில் பயங்கரம்.!
பெண்ணின் உயிரை காப்பாற்றிய பொதுமக்கள்:
அந்த வகையில், மெகபூபாத் பகுதியில் அதிர்ச்சிதரும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் (Hyderabad), மெகபூபாத் மாவட்டம், டோரன்கல் பகுதியில், சாலையோர கரும்புச்சாறு கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று கடைக்கு வந்த பெண்ணின் முடி, எதிர்பாராத விதமாக இயந்திரத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக பெண்ணை காப்பாற்ற, உடனடியாக இயந்திரத்தின் மின்சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், இயந்திரத்தை எதிர்திசையில் கைகளால் சுற்றி, பெண்ணை காப்பாற்றினார். நல்வாய்ப்பாக அக்கம் பக்கத்தினரின் சுதாரிப்பான செயல் பெண்ணை காப்பாற்றியது.
பெண்ணின் தலைமுடி கரும்பு இயந்திரத்தில் சிக்கி மீட்கப்படும் காட்சி:
View this post on Instagram