Maldives Websites Down | Maldives Flag (Photo Credit: @NarayanoiC X / @ani_digital X)

ஜனவரி 07, மாலி (Technology News): தெற்காசியாவில், இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் கவனிக்கத்தக்க இடத்தில் இருப்பது மாலத்தீவு. உலகின் மிகவும் தாழ்வான தீவு நாடு என்ற பட்டியலில் இருக்கும் மாலத்தீவு, கடல் மட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 5 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாவை முதன்மையாக வைத்து அந்நாட்டின் பொருளாதாரம் இருக்கிறது.

சீனாவுடன் கைகோர்க்கும் மாலத்தீவு?: இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த மாலத்தீவில், சமீபகாலமாகவே இந்தியாவுக்கு எதிரான குரல்கள் அதிகரித்து வந்தன. இந்தியாவுக்கு எதிரான கருத்துக்கள் மாலத்தீவு அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. கடந்த 1965ல் மாலத்தீவுகளுக்கு பிரிட்டிஷ் விடுதலை அளித்தது. தற்போது அந்நாட்டின் அதிபராக முகமது முய்சு பணியாற்றி வருகிறார். இன்னும் சில நாட்களில் அவர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். Drug Delivery Gang Arrested: ஆப்-பில் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி: கல்லூரி மாணவர்களை குறிவைத்து முன்னாள், இந்நாள் மாணவர்கள் அதிர்ச்சி சம்பவம்.. ஐவர் கும்பல் கைது.! 

இணையப்பக்கங்கள் முடங்கின: இந்நிலையில், மாலத்தீவு அதிபரின் இணையத்தளம், சுற்றுலா அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையப்பக்கங்கள் அடுத்தடுத்து முடங்கி இருக்கின்றன. இதனால் அவர்கள் பொதுவெளிகளில் தங்களின் தகவலை பகிர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. சீனாவின் நட்பு வட்டாரத்தில் இருந்த இலங்கை பல பிரச்சனைகளை சந்தித்து, தற்போது இந்தியாவுடன் தனது இணக்கமான சூழலை ஏற்படுத்தி வருகிறது. அந்நாடு சமீபத்தில் அடைந்த துயரத்தை உலகமே பார்த்தது. இந்த நிலையில், மாலத்தீவு இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து, சீனாவுடன் நட்பாக முயற்சிப்பது நடக்கிறது.