Chicken Biryani (Photo Credit: Pixabay)

அக்டோபர் 15, சென்னை (Technology News): ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் (ICC Cricket World Cup 2023) தொடர் 13வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. 48 ஆட்டங்கள் கொண்ட உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், 50 ஓவர் நாள் போட்டியில் 10 நாடுகள் விளையாடுகின்றன.

இறுதியில் வெற்றிபெறும் அணி நடப்பு உலகக்கோப்பையை தட்டிச்செல்லும். தற்போதைய நிலையில் இந்தியா (Team India) எதிர்கொண்ட 3 ஆட்டங்களில் மூன்றிலும் வெற்றி அடைந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில இருக்கின்றது.

நேற்று இந்தியா - பாகிஸ்தான் (IND Vs PAK) அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டம் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி (Narendra Modi Cricket Stadium, Ahmedabad, Gujarat) மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் பலரும் வீட்டில் இருந்தபடி இந்தியா - பாகிஸ்தான் போட்டியை கண்டு களித்தனர். Halloween 2023 Vibes: சிலந்தி நாயை பார்த்து தலைதெறித்து ஓடிய தாய்; கலக்கல் வீடியோ வைரல்.! 

CWC 2023 | IND Vs PAK (Photo Credit: Twitter)

இந்நிலையில், உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கியில் (Swiggy Online Food Delivery) நேற்று ஒரு நாள் மட்டும் நிமிடத்திற்கு 250 பிரியாணி (Biryani) வீதம் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் உள்ள வெவ்வேறு இடங்களில், வீடுகளில் இருந்தவாறு கிரிக்கெட் போட்டியை கண்டு களித்த பலரும் பிரியாணியை ஆர்டர் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சத்திஸ்கரில் ஒரே ஒரு வீட்டில் வசித்து வரும் நபர்கள் மொத்தமாக 70 பிரியாணியை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர். அதேபோல, ஒரு லட்சம் குளிர்பானங்கள் (Cool Drinks) ஆன்லைன் மூலமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளன. 10,914 ப்ளூரே சிப்ஸ் (Chips & Snacks) யூனிட்டுகள், 8,054 கிரீன்லே சிப்ஸ் யூனிட்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. அதே வேளையில், 3,059 காண்டங்களும் (Condom) இணைய வழியில் வாங்கப்பட்டுள்ளன.

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், நேற்றைய ஆட்டம் பரபரப்புடன் காணப்பட்டது. இறுதியில் இந்தியா பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றது.