ஏப்ரல் 28, இலண்டன் (London): சர்வதேச அளவில் ஏற்படும் புற்றுநோய்களில் (Cancer), மெலனோமா (Melanoma Skin Cancer) எனப்படும் தோல் புற்றுநோய் ஆண்டுக்கு 1,32,000 பேரின் உயிரை காவு வாங்குகிறது. இந்த தோல் புற்றுநோய்க்கு சிகிச்சையாக கதிரியக்கம், மருந்துகள், கீமோதெரபி சிகிச்சை போன்றவை வழங்கப்படுகின்றன. இந்த புற்றுநோயை எதிர்க்கும் வகையிலான தடுப்பூசி தயாரிக்கும் பணியானது விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது மெலனோமா புற்றுநோக்கு தடுப்பூசி விரைவில் கிடைப்பது உறுதியாகியுள்ளது.

சோதனை கட்டத்தில் தோல் புற்றுநோய் தடுப்பூசி: மெலனோமா தடுப்பூசிக்கான முதல் மற்றும் இரண்டாம்கட்ட சோதனைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது மூன்றவாதுகட்ட சோதனை என்பது லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. இந்த சோதனையில் தன்னார்வலர்கள் மற்றும் தோல் புற்றுநோய் (Skin Cancer Vaccine) காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த புற்றுநோய் தடுப்பு மருந்து பயனர்களிடம் எப்படி செயல்படுகிறது என்பதும் கண்டறியப்படுகிறது. Tornado Hits Guangzhou: அசுரத்தனமாக தாக்கிய சூறாவளி; பதறவைக்கும் மின்னல் தாக்குதல்.. 5 பேர் பலி., 12 பேர் படுகாயம்.! 

சாதகமான முடிவு பெறப்பட்டதால் நோயாளிகள் மகிழ்ச்சி: தோல் புற்றுநோய்க்கு செலுத்தப்படும் தடுப்பூசி காரணமாக நுரையீரல், சிறுநீர்ப்பை, சிறுநீரகம் உட்பட பிற புற்றுநோயின் தாக்கமும் மாறுபடுகிறதா? என்ற சோதனையும் நடந்து வருகிறது. நோயாளிகளின் உடலில் செலுத்தப்படும் தடுப்பூசி புற்றுநோய் செல்களை தேடி அழித்து, மீண்டும் அந்நோய் வராமல் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சிகள் வெற்றியை அடைந்துள்ள காரணத்தால், தோல் புற்றுநோயின் தாக்கத்தில் சிக்கியோர் மகிழ்ச்சியான சூழலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

விரைவில் உலகளவில் அறிமுகம்: எம்ஆர்என் - 4157 (mRNA 4147 Cancer Vaccine V940) வி940 தடுப்பூசி, நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். புற்றுநோயை எதிர்த்து போராடும். புற்றுநோய் கட்டிகளை குறிவைத்து எதிர்த்து போராடி, அவற்றை அழிக்கும் திறன் கொண்டது. புற்றுநோய் கட்டியின் மரபணுவை பாகுபாய்ந்து தற்போது உருவாக்கப்பட்டுள்ள தடுப்பூசி, நோய் கிருமிகளின் மரபணுக்களை சேதப்படுத்தி அதனை வீழ்த்துகின்றன. சோதனைகள் நிறைவுபெற்று தடுப்பூசி விரைவில் உலகளவில் அங்கீகாரம் பெரும் பட்சத்தில், பெருமளவு தோல் புற்றுநோய் மரணங்கள் குறைக்கப்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.