ஜனவரி 26, ஹைதராபாத் (Telangana News): வளமான கலாச்சாரம், பாரம்பரியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் முன்னேற்றம், சாதனை, பாதுகாப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு அண்ணல் அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டு, நாடாளுமன்றத்தில் அவை உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை நினைவுகூறும்பொருட்டு, ஜனவரி 26ம் தேதி குடியரசு தினமாக சிறப்பிக்கப்படுகிறது. இந்திய தலைநகர் டெல்லியில் குடியரசு தலைவரால் மூவர்ணக் கொடியேற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநில தலைநகர்களில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் சார்பில் மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் (Tamilisai Soundararajan), இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு மூவர்ண கொடியை ஏற்றி வைத்தார். அவருடன் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டியும் (Revanth Reddy), அவரது தலைமையிலான அமைச்சரவையும் இடம் பெற்றிருந்தனர். Republic Day in Tamilnadu: மூவர்ணக்கொடியை ஏற்றினார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி..! குடியரசு தின கொண்டாட்டங்கள்.! 

(ట్విట్టర్, ఇన్‌స్టాగ్రామ్ మరియు యూట్యూబ్‌తో సహా సోషల్ మీడియా ప్రపంచం నుండి సరికొత్త బ్రేకింగ్ న్యూస్, వైరల్ వార్తలకు సంబంధించిన సమాచారం సోషల్ మీడియా మీకు అందిస్తోంది. పై పోస్ట్ యూజర్ యొక్క సోషల్ మీడియా ఖాతా నుండి నేరుగా పొందుపరచడం జరిగింది. లేటెస్ట్‌లీ సిబ్బంది ఈ కంటెంట్ బాడీని సవరించలేదు లేదా సవరించకపోవచ్చు. సోషల్ మీడియా పోస్ట్‌లో కనిపించే అభిప్రాయాలు మరియు వాస్తవాలు లేటెస్ట్‌లీ అభిప్రాయాలను ప్రతిబింబించవు, అలాగే లేటెస్ట్‌లీ దీనికి ఎటువంటి బాధ్యత వహించదు.)