ChatGPT Pulse Update (Photo Credit: @webrazzi X)

செப்டம்பர் 26, சென்னை (Technology News): பிரபல செயற்கை நுண்ணறிவு தளமான ஓபன் ஏஐ சாட்ஜிபிடி மக்களுக்கு பல வகையில் உதவி செய்து வருகிறது. சர்வதேச அளவில் 800 மில்லியன் பயனர்களின் கவனம் பெற்ற ஓபன் ஏஐ (Open AI) நிறுவனத்தின் (ChatGPT) சாட்ஜிபிடி மாணவர்களுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காகவும், நாம் தெரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களை எளிமையாக கற்றுக் கொள்வதற்கும் பயன்படுகிறது. ஆங்கிலம் மட்டுமல்லாது இதர மொழிகளை கற்றுக்கொள்வதிலும் இதன் பங்கு அதிகம் என்று தான் கூற வேண்டும்.

சாட்ஜிபிடி பல்ஸ் என்றால் என்ன (What Is ChatGPT Pulse)?

இந்நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் சார்ஜிபிடி பல்ஸ் (ChatGPT Pulse) என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதி தற்போது சாட்ஜிபிடி ப்ரோ (ChatGPT Pro) பயனர்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முந்தைய உரையாடல்கள், காலண்டர் நிகழ்வுகள், மின்னஞ்சல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தினசரி அப்டேட்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்புகளின் மூலம் பயனர்களின் ஆர்வங்களுக்கேற்ப உணவு குறிப்புகள், மொழி கற்றல், உடற்பயிற்சி திட்டங்கள், பயணத்திட்டங்கள், உடல் நலம் சார்ந்த குறிப்புகள் போன்றவற்றை விரிவான தகவல்களாகவும், விஷுவல் கார்டுகளாகவும் சார்ஜிபிடி வழங்கும். TCS Q2 Results: TCS பங்குதாரர்களுக்கு இன்பச்செய்தி.. இடைக்கால டிவிடண்ட் அறிவிப்பு.! 

பயனர்களின் வேலையை எளிதில் முடிக்க உதவும் சாட்ஜிபிடி :

மேலும் பயனர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு எந்த ஒரு ப்ராம்ப்ட் அல்லது உத்தரவுமின்றி தகவல்களை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்களின் தினசரி செயல்பாடுகளை விரைவாகவும், எளிதாகவும் முடிக்க முடியும். அதேபோல பழைய முறை போல் அல்லாமல் பயனர்களின் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக பல்ஸ் முன்கூட்டியே தகவல்களை ஆராய்ந்து Proactive AI Assistant போல செயல்படும். பயனர்களின் விருப்பம் மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்புடைய தகவல்களை பரிந்துரைக்கும்.

வாழ்க்கையை எளிதாக்கும் டெக்னாலஜி :

இந்த வசதியானது சிறந்த முறையில் செயல்படுவதற்காக தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகல் உரிமை (User Personal Data Access) தேவையாக இருந்தாலும், பயனரின் தனி உரிமை மாடல்களுக்கு பயிற்றுவிக்க பயன்படுத்தப்படாது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு தனிப்பட்ட மற்றும் நேரடி அப்டேட்களை வழங்கும். தற்போது சார்ஜிபிடி பல்ஸ் அம்சமானது சாட்ஜிபிடி ப்ரோ பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலையில், எதிர்காலத்தில் பிற பயனர்களுக்கும் கிடைக்கும் வகையில் உருவாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாட்ஜிபிடி பல்ஸ் தொடர்பான அறிவிப்பு (ChatGPT Pulse Announcement):