Pregnancy (Photo Credit: Pixabay)

அக்டோபர் 28, சென்னை (Health Tips): பெண்கள் கர்ப்பகாலத்தின்போது சாப்பிடும் உணவு விஷயங்களில் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். ஏனெனில் இவ்வாறான காலகட்டங்களில் தாயின் உணவு குழந்தையின் வளர்ச்சிக்கும் முக்கியம் என்பதால், உடலுக்கு உகந்த உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுவது தாய்-சேய் ஆரோக்கியத்திற்கு நல்லது.

சர்க்கரை, மதுபானம் போன்றவற்றை தவிர்ப்பது மட்டுமல்லாமல், எண்ணெயில் வறுத்த உணவுகள், அரைகுறையாக சமைக்கப்படும் துரித உணவகத்தில் கிடைக்கும் அசைவ உணவுகள், கழுவப்படாத பழங்கள் போன்றவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும்.

தூய்மைக்கேடான விஷயங்களை தெரிந்தே சாப்பிட்டோமேயானால், கருவில் இருக்கும் குழந்தையின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியத்திற்கும் பங்கம் ஏற்படலாம். நன்றாக சமைக்கப்பட்ட, ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவுகளை கர்ப்பகாலத்தில் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். Para Javelin Throw Gold Medal: பாரா ஈட்டி எறிதல், ரோவர்ஸ், ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற இந்தியா; பாரா ஆசிய விளையாட்டுகளில் குவியும் பதக்கங்கள்.! 

இன்று கர்ப்பகாலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்த தகவலை காணலாம்.

மீன் சாப்பிடுவது உடலுக்கு நன்மை எனினும், மீன்களில் இருக்கும் மெர்குரி அதிகளவு உடலில் சேரும் பட்சத்தில், அது குழந்தைக்கு நரம்பு பாதிப்பை ஏற்படுத்தலாம். கர்ப்பகாலத்தில் சுறா, டியூனா, ஆரஞ்சு மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். நாட்டு மீன்களை சாப்பிட விருப்பம் இருப்பின், மருத்துவரின் அறிவுரைப்படி / அனுமதித்தால் மட்டுமே குறைந்தளவு எடுத்துக்கொள்ளலாம்.

பச்சை உணவுகள், மாமிசங்கள் போன்றவை துரித உணவகத்தில் பெரும்பாலும் முன்னதாகவே தயார் செய்து வைக்கப்பட்டு, பின் அரைவேக்காடு பதத்துடன் உடனடியாக தயாரித்து வழங்கப்படும். இவ்வாறான உணவுகளை கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் பாக்டீரியாக்களின் வளர்ச்சி இருக்கும். இதனால் உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, கருக்கலைப்பு அல்லது குறைபிரசவத்திற்கு வழிவகுக்கலாம். Dog Raped by Young Man: 23 வயது இளைஞரால் நாய் பாலியல் பலாத்காரம்; பால்கனியில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்.!

பச்சை முட்டை சாப்பிடும் நபர்களுக்கு எவ்வித பிரச்சனை இருக்காது எனினும், அதனை வைத்து தயாரிக்கப்படும் மயோனைஸ், சாலட் போன்றவற்றை கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டும். வேகவைத்த முட்டையை சாப்பிடுவது சாலச்சிறந்தது.

பதப்படுத்தப்படாத பால் மற்றும் பால் பொருட்களை தவிர்த்துவிடுவது நல்லது. பப்பாளியில் கருப்பை சுருக்கத்தினை ஏற்படுத்தும் நொதி இருப்பதால், அது கருச்சிதைவுக்கு வழிவகை செய்யும். அதேபோல, பழுக்காத பப்பாளியை சாப்பிடுவது குறைபிரசவத்திற்கும் வழிவகை செய்யும்.

நன்கு சுத்தம் செய்த பழங்கள், காய்கறிகளை நாம் சாப்பிடலாம். கழுவாமல் எக்காரணம் கொண்டும் இவைகளை சாப்பிட கூடாது. காரசாரமான உணவுகளை கர்ப்பகாலத்தில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல, துளசி, கற்பூரவள்ளி, பெருஞ்சீரகம், மிளகு போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.