மார்ச் 23, திருச்சூர் (Trissur News): கேரளா (Kerala) மாநிலத்தில் உள்ள திரிச்சூர் மாவட்டம், அறத்துப்புழாவில் உள்ள கோவிலை பூரம் திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. மக்கள் தங்களின் குடும்பத்துடன் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அச்சமயம், பாரம்பரிய முறைப்படி விழாவுக்கு மந்தாரகடவு ஆராதனை நிகழ்ச்சிக்காக யானை அழைத்து வரப்பட்டது. யானையின் வால்களை பிடித்து இருவர் இழுத்தனர். இதனால் ஆவேசமான யானை அவர்களை துரத்தியவாறு, மற்றொரு யானையின் மீது மோதியது. இதனால் பதறிப்போன அந்த யானை ஓட்டமெடுக்க, கோபத்தில் இருந்த யானை அதனை துரத்திச்சென்றது. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகவில்லை. பதைபதைப்பு சம்பவத்தின் வீடியோ உங்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது. Aged Man Died by Bull Attack: திடீர் ஆவேசமாகி முட்டிதூக்கிய காளை.. பாஜக பிரமுகர் பரிதாப பலி.. ஊருக்காக வாழ்ந்து துள்ளத்துடிக்க பறிபோன உயிர்.! 

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)