டிசம்பர் 14, புதுடெல்லி (Technology News): ஜியோமி நிறுவனம் ரெட்மி ஸ்மார்ட்போனை தொடர்ந்து பட்ஜெட்டுக்கு ஏற்ற வகையில், சிறந்த அம்சங்களுடன் வழங்குவதால் அதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வரும் ஜனவரி 4ம் தேதி ஜியோமி தனது ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) ஸ்மார்ட்போனை இந்திய சந்தைகளில் விற்பனைக்காக அறிமுகம் செய்கிறது.
சீனாவில் தொடங்கிய விற்பனை: ரெட்மி நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ ப்ளஸ் (Redmi Note 13 Pro+) ஆகியவையும் அறிமுகமாகின்றன. சீனாவில் கடந்த செப்டம்பர் மாதம் ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டன. தற்போதுதான் இந்தியாவில் அதன் விற்பனை என்பது தொடங்குகிறது.
ஜனவரி 04, 2024 அறிமுகம்: ஜியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 ஸ்மார்ட்போனை சூப்பர்பவர் கொண்ட சூப்பர் நோட் போனாக அறிமுகம் செய்கிறது. டிசம்பர் இறுதியிலேயே இது அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், இறுதியில் அவை புத்தாண்டு கடந்து தள்ளிப்போனது. 6.67 இன்ச் AMOLED பேனல், 120 Hz புதுப்பிப்பு திறன், 1.5K ரிசொல்யுஷன் உட்பட பல அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. Rowdy Killed in Encounter: 18 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரௌடி விக்கியை என்கவுண்டரில் போட்டுத்தள்ளிய காவல்துறை.. அதிரடி நடவடிக்கை.!
3 மாடலிலும் வெவ்வேறு ப்ராசசர்கள்: அதேபோல, தினமும் ஒவ்வொரு செயலிலும் நல்ல செயல்திறனை காட்டும் வகையில் மீடியா டெக் Dimensity 6080 சிப்செட் உதவி செய்யும். ப்ரோ ரக மாடல் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 7s Gen 2 தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனில் மீடியா டெக் Dimensity 7200 உபயோகம் செய்யப்பட்டுள்ளது. இது சிறந்த செயல்பாடுகளுடன் இருக்கும்.
பேட்டரி & சார்ஜர்: போட்டோ பிரியர்களுக்கு ஏற்ப ரெட்மி 13 ஸ்மார்ட்போனில் 100MP கேமிரா, 2MP மைக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ப்ரோ மற்றும் ப்ரோ ப்ளஸ் ரக ஸ்மார்ட்போனில் 3 கேமிராக்கள் 200 MP திறனுடன், Samsung ISOCELL HP3 சென்சாருடன் அமைக்கப்பட்டுள்ளன. 8 MP Wide Angle லென்சும் உள்ளது. 13 மாடலில் 5000 mAh பேட்டரியும், ப்ரோ ப்ளஸ் மற்றும் ப்ரோ மாடலில் 5,100 mAh பேட்டரியும் இணைக்கப்பட்டுள்ளது. இதனுடன் 33W, 67W, 120 W சார்ஜரும் வழங்கப்படுகிறது.
விலை நிலவரம்: இந்திய சந்தைகளில் ரெட்மி 13 ஸ்மார்ட்போன் ரூ.13,900 க்கும், ரெட்மி 13 ப்ரோ ரூ.17,400 க்கும், ரெட்மி நோட் 13 ப்ரோ ரூ.22,800 க்கும் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது. விலைகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு ஜனவரி 4 அன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போது தெரிவிக்கப்படும். அணைத்து மொபைல்களும் 5G நெட்ஒர்க் சேவை வழங்கும்.