நவம்பர் 28, சென்னை (Chennai): 2023ம் ஆண்டு தற்போது இன்னும் 32 நாட்கள் கடந்ததும் நிறைவுபெறுகிறது. இதனால் 2024ம் ஆண்டை வரவேற்க உலகமே தயாராகி வருகிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் டிசம்பர் மாதத்தில் தனது தயாரிப்புகளை சந்தைப்படுத்த தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இதனால் வரும் டிசம்பர் மாதத்தில் இந்திய தயாரிப்பான லாவா ப்ளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் (Lava Blaze 2 5G) முதல் மோட்டோரோலா ரேஸர் 40 அல்டரா (Motorola Razr 40 Ultra Glacier Blue Variant), சாம்சங் கேலக்சி ஸ்மார்ட்போன்கள் வரை அடுத்தடுத்து பல சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தை பொறுத்தமட்டில் விவோ எக்ஸ் 100 சீரிஸ் (Vivo X100 series), ஐக்யூஓஓ 12 (iQOO 12), போகோ எக்ஸ் 6 ப்ரோ (Poco X6 Pro), ஹானர் 100 சீரிஸ் (HONOR 100 Series) போன்ற ஸ்மார்ட்போன்கள் சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
டிசம்பரில் வெளியாகவுள்ள ஸ்மார்ட்போன்கள் (Upcoming Smartphones in December 2023): Thailand Wedding Horror: குடிபோதையில் மணமகள் உட்பட 4 பேரை சுட்டுக்கொன்ற மணமகன்: இறுதியில் தற்கொலை.. உறவினர்களை பதறவைத்த சம்பவம்.!
ஐக்யூஓஓ 12 5ஜி (iQOO 12 5G): இந்தியாவில் ஸ்னாப்ட்ரகன் 8 ஜென் 3 சிறப்பம்சத்துடன் டிசம்பர் 12ம் தேதி iQOO 12 5G ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 12 (OnePlus 12): ஒன் பிளஸ் 11 சீரிஸின் வெற்றியைத்தொடர்ந்து, ஒன் பிளஸ் 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 04ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் சிறப்பம்சமாக ஸ்னாப்ட்ரகன் 8 ஜென் 3 ப்ராசசர் (Snapdragon 8 Gen 3 processor) அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விற்பனை தொடங்கும் தேதி தொடர்பான அறிவிப்பு இல்லை. இந்த ஸ்மார்ட்போன் ரூ.60 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹானர் ஸ்மார்ட்போன் (Honor Smartphones): கடந்த நவம்பர் மாதம் சீனாவில் ஹானர் 100, ஹானர் 100 ப்ரோ (Honor 100 & Honor 100 Pro) ஸ்மார்ட்போன்கள் விற்பனை தொடங்கிவிட்டது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதம் இந்தியாவில் தனது விற்பனையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy M44 5G: சாம்சங் நிறுவனத்தின் Samsung Galaxy M44 5G ஸ்மார்ட்போன், இம்மாதமே இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில், டிசம்பர் மாதம் வெளியாவது தெரியவந்துள்ளது.
அதேபோல, விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ் 100 (Vivo X 100 Series) டிசம்பர் மாதத்திலும், ரூ.10 ஆயிரம் மதிப்பில் ரெட்மியின் 13 சி (Redmi 13C) ஸ்மார்ட்போன் டிசம்பர் 06ம் தேதியிலும் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.