Samsung Galaxy Tab A9 & Tab A9 + (Photo Credit: X)

அக்டோபர் 23, புதுடெல்லி (Technology News): சர்வதேச அளவில் செல்போன் (Smartphone Users) பிரியர்களின் நன்மதிப்பைப் பெற்ற சாம்சங் (Samsung) நிறுவனம், தற்போது தனது சாம்சங் கேலக்ஸி (Samsung Galaxy Tab) டேப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

8.7 இன்ச் அளவிலான டிஸ்ப்ளே மற்றும் 11 இன்ச் டிஸ்ப்ளே என இரண்டு வகை மாடல்களை அறிமுகம் செய்துள்ள சாம்சங், அதற்கு டேப் A9 மற்றும் டேப் A9 பிளஸ் என்று பெயரிட்டுள்ளது.

கிராபைட், சில்வர், நேவி ஆகிய நிறங்களில் டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் 64 ஜிபி ரோம், 8ஜிபி ரேம் 128 ஜிபி ரோம் ஆகிய மாடல் இரண்டு டேப்களிலும் வழங்கப்பட்டுள்ளது.

டேப் ஏ9 மாடலில் 8 எம்பி மற்றும் 2 எம்பி பின்பக்க கேமரா, சாம்சங் ஏ9 பிளஸ் மாடலில் 8 எம்பி மற்றும் 5 எம்பி பின்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. Israel Palestine War: இஸ்ரேல் - பாலஸ்தீன் போரில் சிதையுறும் காசா நகரம்; கொன்று குவிக்கப்படும் மக்கள்.! 

5100 mAh பேட்டரி 60 HZ புதுப்பிப்பு திறன் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் சாம்சங் டேப் ஏ9 மாடலில் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல, ஏ9 பிளஸ் மாடலில் 7,040 mAh பேட்டரி, 90 Hz புதுப்பிப்பு திறன், கேம்களுக்கான பிரத்தியேக வடிவமைப்பு, குவாட் ஸ்பீக்கர், டால்பி ஆட்டம்ஸ் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன.

சாம்சங் டேப் ஏ9 பிளஸ் கணினிக்கு இணையான மல்டி டாஸ்கிங் திறன் கொண்ட செயல்பாடு முறையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.