Israel Palestine War Visuals (Photo Credit: X)

அக்டோபர் 23, காசா (World News): இஸ்ரேல் நாட்டுக்குள் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி போர் தொடுத்து சென்றனர். இஸ்ரேல் நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் ஜீவிஸ் மாகாணத்தைச் சேர்ந்த 1400 இஸ்ரேலிய மக்கள் மற்றும் வெளிநாட்டவர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

இஸ்ரேல் நகரை நோக்கி பல ஏவுகணையை தாக்குதலும் நடத்தப்பட்டது. இதனையடுத்து, பதிலடியாக போரில் களம் இறங்கிய இஸ்ரேல் அரசு, ஹமாஸ் பயங்கரவாதிகள் இருப்பிடம் மற்றும் காசா நகரில் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலின் காரணமாக தற்போது வரை பாலஸ்தீனத்திற்குள் மொத்தமாக 6000 அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர். இவர்களில் 1200 குழந்தைகளும் அடங்குவர்.

பலரை காணவில்லை என்பதால், அவர்கள் குறித்த நிலை தற்போது வரை தெரியவில்லை. 14 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் காயம் அடைந்து உயிருக்கு போராடிவரும் நிலையில், அவர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் தொடர்ந்து மருத்துவ உதவிகளை செய்து வருகிறது. Bigg Boss S7 Tamil Wild Card Entry: ஒருத்தர் இல்ல.. 5 பேர்...! பிக் பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரி அறிவிப்பு இதோ.. கமல் சொன்ன சர்ப்ரைஸ் செய்தி.! 

மேலும், போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனிய நாட்டிற்கு, உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உதவியையும் செய்து வருகிறது. இதனால் எகிப்திலிருந்து அங்கு சாலை மார்க்கமாக மருத்துவ உபகரணங்களும், மருத்துவ பொருட்களும் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஐநா அமைப்பு தனது மருத்துவ பணியாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது.

தொடர் உயிரிழப்புகளால் காசா நகரமே சிதையுண்டு வரும் நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் முதல் தாக்குதல், காசாவின் அழிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இஸ்ரேல் தரப்பில் 1400 மக்கள் கொடூரமாக தலைகள் துண்டிக்கப்பட்டு வீடு வீடாக கொலை செய்யப்பட்ட நிலையில், இஸ்ரேல் படையினர் காசா நகரின் மீது குண்டுமழை பொலிந்து அதைவிட பலமடங்கு அழிவை தந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.