Google Maps (Photo Credit: @iam_chonchol X)

மே 26, கலிபோர்னியா (Technology News): கூகுள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் கூகுள் மேப்ஸ் செயலி, பயனர்கள் தங்களுக்கு தெரியாத இடங்களுக்கு செல்லவும் உதவி செய்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரிய நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை கூகுள் மேப்பில் தரவுகளில் இருப்பதால், எளிதில் பயனர் தனக்கு தெரிந்த நகரத்தில் இருந்து, தனக்கு தெரியாத நகரில் உள்ள முகவரிக்கு எளிய முறையில் பயணம் செய்கிறார். கடந்த 2005ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் மேப்ஸ், தற்போது 74 பிராந்திய மொழிகளில் தனது சேவையை வழங்குகிறது. பொதுவான பயணம், சுற்றுலா பயணம் என கூகுள் மேப்ஸில் நாம் செல்ல வேண்டிய இடம், அங்குள்ள சுற்றுலா தளங்கள், பொதுசேவை மையங்கள், வணிக வளாகங்கள் என அனைத்தையும் பலவகை கோணங்களில் நாம் காணலாம். இதில் போக்குவரத்து நெரிசல் இருந்தால், அதனையும் முன்கூட்டியே தெரிவித்துவிடும்.

ஏஐ பயன்பாட்டுடன் அசத்தல் அப்டேட்: நமது செல்போன் சிக்னலின் வாயிலாக நமது இருப்பிடத்தை மிகவும் துல்லியமாக கணித்துக்கூறும் வகையில் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது கூகுள் மேப்பில் ஏஐ பயன்பாடு உட்புகுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கூகுள் மேப்பில் இனி நாம் உணவகத்தின் பெயரை தேடாமல், மதிய உணவு எப்படி? (How about Lunch) என்ற வாசத்தை கொடுத்து தட்டினால், அது அருகில் உள்ள உணவகங்களை கண்டறிந்து கூறும். இது ஏஐ தொழில்நுட்பத்தால் நடக்கிறது. NIMS Doctors Save Child Life: இதயத்திற்கு அருகில் சிக்கிய அம்பு; சிறுவனின் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்.. நெகிழ்ச்சி செயல்.! 

லைவ் வியூ & 3டி அப்டேட்: லைவ் வியூ (Live View) முறையில், நாம் கேமிராவின் உதவியுடன் நாம் செல்லவேண்டிய இடத்திற்கு மிகதுரிதமான வகையில் பணயத்தை மேற்கொள்ளலாம். இது மெட்ரோ இரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் நமது பாதையை தவறிவிடாமல் விரைந்து செல்வதற்கு உதவி செய்யும். கூட்ட நெரிசலிலும் அங்குள்ள ஏடிஎம் மையங்களை அணுக உதவும். முப்பரிமாண முறையில் இனி நாம் நமது மேப்சை பயன்படுத்தும் அம்சமும் இணைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை பேரிடர் நிறைந்த காலங்களில் மக்களுக்கு சுற்றுவட்டார நிலைமையை யூகிக்க உதவி செய்யும்.

கூகுள் லென்ஸ் பயன்பாடு: பயனரின் வசதிக்காக வானில் இருந்து அவரை சுழன்று பார்க்கும் ஏபிஐ தொழில்நுட்பமும் உள்ளது. கூகுள் மேப்பில் உள்ள லென்ஸ் அமைப்பு, கேமிராவை நாம் இயக்கி சுற்றுப்புறங்களை காண்பித்தாள், அது உடனடியாக ஏஐ வாயிலாக தரவுகளை திரட்டி ஏடிஎம், உணவகம் உட்பட பிற விஷயங்களின் இருப்பிடத்தையும் சொல்லும். இந்த அம்சங்கள் விரைவில் ஓவொரு பயனராலும் பயன்படுத்தப்பட்டு, அவர்களின் கோரிக்கைக்கேற்ப தரவுகள் புதுப்பிக்கவும் செய்யப்படும்.