Sambhav Smartphones (Photo Credit: @ANI X)

ஜனவரி 18, புதுடெல்லி (New Delhi): இந்திய இராணுவத்தின் படைப்பிரிவுகள், இந்திய எல்லைகளை நிலம், கடல், வான்வழியில் பாதுகாத்து வருகிறது. இராணுவ அதிகாரிகள் தங்களின் தகவல்களை, அரசுக்கு தெரிவிக்க வேண்டிய முக்கிய விஷயங்களை முன்னதாக மின்னஞ்சல் உட்பட பல்வேறு தொழில்நுட்ப செயலிகள் கொண்டு பகிர்ந்து வந்தனர். அவ்வப்போது, இவை வெளியிலும் கசிந்தது. மேலும், இராணுவ அதிகாரிகளால் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட்போன்கள் எதிராளிகளால் தொழில்நுட்ப ரீதியாக திருடப்படும் வாய்ப்புகளும் அதிகம் இருந்தன.

30 ஆயிரம் பேர் உபயோகம் செய்கிறார்கள்:

இதனிடையே, இந்திய இராணுவம் சம்பவ் எனப்படும் ஸ்மார்ட்போன்களை ரகசியமாக பயன்படுத்தி வந்த நிலையில், அதன் வாயிலாக அரசுக்கு தகவல் பரிமாற்றங்கள் வழங்கப்பட்டன. இந்த சம்பவ் ஸ்மார்ட்போன்கள் (Sambhav Smartphones) இராணுவ உயர்நிலை அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகிறது. தற்போது வரை சுமார் 30,000 க்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தப்படுவதாக விபரங்கள் தெரிவிக்கின்றன. Sniffer Dog Astro Dies: மதுரை மத்திய சிறை மோப்ப நாய் ஆஸ்ட்ரோ மரணம்; 21 குண்டுகள் முழங்க உடல் நல்லடக்கம்.! 

பாதுகாப்பான தகவல் பரிமாற்றம்:

இந்த விஷயம் குறித்து இராணுவ தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி, செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்து இருக்கிறார். சம்பவ் ஸ்மார்ட்போன்கள் பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அவை முழு அளவிலான நம்பிக்கையுடன், தகவலை கசியாத வண்ணம் பார்த்துக்கொள்ளும் அமைப்புகளை கொண்டுள்ளது. சம்பவ ஸ்மார்ட்போனில் எம்-சிக்மா எனப்படும் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டு, வாட்சப் போன்ற தகவல் பரிமாறும் செயல்களுக்கு இணையான சேவையை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவ் ஸ்மார்ட்போன்:

இதனை ஏர்டெல், ஜியோ நிறுவன நெட்ஒர்க் அலைவரிசையுடன் பயன்படுத்தலாம். இதன் வாயிலாக இராணுவத்தின் முக்கிய ஆவணங்கள் பொதுவெளிகளில் கசிவது தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட்போனில் முக்கிய அதிகாரிகளின் நம்பரும் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக அதிகாரிகளின் நம்பரை சேமிக்க தேவையில்லை எனவும், 5ஜி தொழில்நுட்பத்துடன் சம்பவ் ஸ்மார்ட்போன்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய பார்வையில் பாதுகாப்புத்தன்மை கொண்ட இராணுவ செல்போன் சம்பவ் (Secure Army Mobile Bharat Version) என அறியப்படுகிறது. இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டது ஆகும்.