Smartphone | Child Using Mobile (Photo Credit: Pixabay)

மே 16, சென்னை (Health Tips): இன்றளவில் இருக்கும் டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு என்பது தவிர்க்க இயலாத விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. எந்த நேரமும் செல்போன் நமக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் விஷயங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் கோடிக்கணக்கானோர் அதனை சார்ந்த பணிகளை செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு செல்போன் பயன்பாடு என்பது அதிமுக்கியம்.

பெரியவர்கள் பணிக்காக செல்போன் பார்க்கிறார்கள் என்றால், சில சிறார்கள் எந்த நேரமும் செல்போனை வைத்து கேம் விளையாடி வருகின்றனர். இது எதிர்கால தலைமுறைக்கு பேராபத்தாக அமைந்துவிடுகிறது. இந்தியாவில் ஏற்பட்ட பப்ஜி மரணங்களும், தற்கொலைகளும், சண்டைகளுமே அதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. Child Pregnancy: சிறுவயது கர்ப்பத்தால் பாதிக்கப்படும் சிறுமிகள்; காரணங்கள் என்னென்ன?.. நெஞ்சை பதறவைக்கும் ரிப்போர்ட்.!

இந்நிலையில், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சாப்பியன் தனியார் ஆய்வகம் சார்பில், ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தும் இளவயதினரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. உலகளவில் 40 நாடுகளை சேர்ந்த 18 வயது முதல் 24 வயது வரை உடைய 27,969 பேரிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு நடந்தன.

இந்த ஆய்வில் இந்தியாவை சேர்ந்த 4 ஆயிரம் நார்களும் கலந்துகொண்டனர். ஆய்வு முடிவுகளின் படி, குழந்தைகளிடம் ஸ்மார்போன் கொடுப்பது நாகரீகம், கெளரவம் போல ஆகிவிட்டது என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தனது குழந்தை டிஜிட்டல் அறிவை ஸ்மார்ட்போன் உபயோகம் செய்வதால் பெறுகிறார்கள் என நம்புகின்றனர்.

இதனால் அவர்களின் எதிர்காலம் சூனியம் ஆகிவிடும் சூழலை பெற்றோர் மற்றும் குழந்தைக்கு செல்போன் கொடுப்போர் மேற்கொள்கின்றனர் என்றும் தெரியவருகிறது. ஸ்மார்ட்போன் உபயோகம் செய்வதால், சிறுவயதிலேயே மனநல பிரச்சனை, தற்கொலை எண்ணங்கள், யதார்த்த உலகில் இருந்து விலகி இருத்தல் என பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். Kenya Cult Issue: தோண்டத்தோண்ட 200 சடலங்கள்.. சொர்க்கத்திற்கு போக பாதிரியாரை நம்பி பட்டினியாக, உயிருடன் புதைக்கப்பட்ட மக்கள்.. கென்யாவில் பயங்கரம்.!

இவ்வாறான குழந்தைகளுக்கு வாழ்க்கையில் எதிர்நீச்சலிடும் எண்ணம் குறைந்துள்ளது. ஆண்களை விட பெண்களே இதில் அதிகம் பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். 6 வயது முதலாக ஸ்மார்ட்போன் உபயோகம் செய்யும் இளம்பெண்களின் 74% பேருக்கு மனஅழுத்தம் தொடர்பான பிரச்சனை இருந்து வந்துள்ளது.

கடந்த காலங்களில் குழந்தைகளில் தங்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரை நேரில் நீண்ட நேரம் சந்தித்து உரையாடி வந்ததால் பல பக்குவத்தை இயற்கையாகவே கற்றறிந்த நிலையில், தற்போதைய ஸ்மார்ட்போன் உலகில் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.