ஜூலை 10, சான் பிரான்சிஸ்கோ (Technology News): ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் (Elon Musk) வாங்கியதில் இருந்து நிர்வாகம் மற்றும் அமைப்பு ரீதியாக பல்வேறு மாற்றங்கள் அதிரடியாக கொண்டு வரப்பட்டன. அந்த வகையில், சமீபத்தில் எலான் மஸ்க் பணம் செலுத்திய ட்விட்டர் (Twitter) சந்தாதாரர்களுக்கு நாளொன்றுக்கு 6000 ட்விட் பதிவுகளை பார்க்கலாம், பணம் செலுத்தாத சந்தாதாரர்கள் 600 ட்விட்களை பார்க்கலாம், புதிய பயனர்கள் 300 பதிவுகளை காணலாம் என கட்டுப்பாடுகளை விதித்தார்.
எலான் மஸ்கின் இவ்வாறான அறிவிப்பு உலகளவிலான ட்விட்டர் பயனர்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக உலக வணிக சந்தைகளில் முக்கியமான நாடாக கருதப்படும் இந்தியாவில் பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டது. பலரும் ட்விட்டர் நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தனர். MS Dhoni Reaction: விமான நிலையத்தில் தோனியிடம் நலம் விசாரித்த ரசிகர்; தோனி என்ன பதில் கூறினார் தெரியுமா?.! வீடியோ வைரல்.!
இந்த வாய்ப்பை கணகச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட பேஸ்புக்-வாட்சப் & இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகெர்பெர்க் (Mark Zuckerberg), ட்விட்டருக்கு மாற்றாக Threads எனப்படும் செயலியை அறிமுகம் செய்து அதிரடி காண்பித்தார். இன்ஸ்டாகிராம் போலவே இருந்த Threads App பல விமர்சனத்தை சந்தித்தாலும், அதன் பயனர்கள் அறிமுகம் செய்யப்பட்ட நாளில் இருந்து வரை 100 மில்லியனை கடந்துள்ளது.
Threads செயலி 100 நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட 2 மணிநேரத்தில் 2 மில்லியன் பயனர்களை கடந்தது, 12 மணிநேரத்தில் 30 மில்லியன் பயனர்களை கடந்து இருந்தது. தற்போது 100 மில்லியன் பயனர்களை கடந்து Threads சாதனை செய்துள்ளது. அதேபோல, எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் இருக்கும் OpenAI நிறுவனம் அறிமுகம் செய்த Chat GPT பயனர்களை விட குறைந்த நேரத்தில் அதிக பயனர்களை திரெட்ஸ் பெற்றுள்ளது.