Tik Tok Logo (Photo Credit: Pixabay)

ஜனவரி 23, சான் பிரான்சிஸ்கோ (Technology News): சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த டிக் டாக் நிறுவனம், தனது செயலி சேவையை பல நாடுகளில் வழங்கி வந்தது. இந்தியாவிலும் டிக் டாக் செயலியும் பிரதானமாக இருந்து வந்த நிலையில், கடந்த ஜூன் 2020ல் தகவல் திருட்டு தொடர்பான விஷயத்தில் 100 சீன செயலிகளை தடை செய்ததோடு டிக் டாக்கும் மத்திய அரசால் தடை செய்யப்பட்டது.

விற்பனை & விளம்பர பிரிவு அதிகாரிகள் நீக்கம்: அமெரிக்கா உட்பட பிற நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் செயலி மக்களின் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில், டிக் டாக் செயலி தனது பணியாட்கள் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கிறது. அதன்படி, விற்பனை மற்றும் விளம்பர பிரிவுகளில் பணிநீக்கங்கள் செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. Goosebumps Moment: கண்களை திறந்து அங்கும்-இங்கும் பார்த்த ராமர்? பரசவத்தில் பக்தர்கள்.. வைரலாகும் வீடியோ.! 

அமெரிக்காவில் 100 பணியாட்கள் நீக்கம்: இதன் வாயிலாக 100 பேர் பணிநீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 7,000 பணியாளர்கள் கொண்டு டிக் டாக் செயல்பட்டு வருகிறது. அங்கு மட்டும் 150 மில்லியன் பயனாளர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இருந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களின் பணியாட்களை குறைக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், டிக் டாக்கும் அதே செயல்முறையில் இறங்கி இருக்கிறது.