ஜூன் 07, புதுடெல்லி (New Delhi): தகவல் தொடர்பு விவகாரத்தில் இந்திய புதிய வளர்ச்சியை எட்டிப்பிடித்துள்ள நிலையில், அதனை மேலும் ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. அதன்பேரில், இன்று பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi Govt) தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் 3-வது புனரமைப்பு திட்டத்தின் கீழ், மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது. இதனால் இனி பி.எஸ்.எல்.எல் சார்பில் 4G மற்றும் 5G (BSNL 4G) சேவைகளை மக்களுக்கு வழங்க தேவையான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படும். இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலமாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியில் இருந்து ரூ.2,10,000 கோடியாக உயர்ந்துள்ளது. Baba Vanga: அணுசக்தி ஆலை வெடிப்பால் ஆபத்தில் ஆசிய நாடுகள் – 2023ல் நடக்கப்போகும் பயங்கர விஷயங்கள்.. பாபா வாங்கா பகீர் தகவல்.!
அரசின் நடவடிக்கை மூலமாக இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் பி.எஸ்.என்.எல் சார்பில் 4G முதல் 5G சேவை வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அது சார்ந்த பணிகளும் துரிதமாக நடைபெறும். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மாதம் ஒருலட்சம் வீதம் உயர்ந்து வருகிறது. இதனால் அதன் வருமானம் ரூ.2,071 கோடி அளவில் உயர்ந்து இருக்கிறது.