Surgery (Photo Credit: Pixabay)

மே 12, பாஸ்டன் (Boston): அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் மாகாணம், பாஸ்டன் பகுதியை சேர்ந்தவர் ரிக் ஸ்லேமனின் (வயது 62). டைப் 2 நீரழிவு (Type 2 Diabetes) மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட ரிக், கடந்த 2018ம் ஆண்டு தனது சிறுநீரகத்தை மாற்றியமைத்தார். அதனைத்தொடர்ந்து, தற்போது அவரின் சிறுநீரகம் (Pig Kidney Transplant) தொடர்ந்து செயலிழப்பை சந்தித்து வந்த நிலையில், மீண்டும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவெடுத்தார். பாஸ்டன் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, சிறுநீரக தேவைக்காக காத்திருந்த ரிக்கிடம், பன்றியின் சிறுநீரகத்தை மாற்றாக பொருத்தி சோதனை செய்து பார்க்கலாம் என்ற ஆலோசனையை மருத்துவ குழுவினர் வழங்கி இருக்கின்றனர். Elder Man Killed: 20 வயது திருநங்கையால் வயதான நபர் கொடூர கொலை; நெஞ்சை நடுநடுங்க வைக்கும் சம்பவம்.! 

நோயாளியின் உயிர் ஆசையும், அறிவியல் சோதனை முயற்சியும்: ஏனெனில், பாஸ்டன் நகரில் மட்டும், மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக 1400 பேர் முன்பதிவு செய்து காத்திருந்துள்ளனர். இதனால் மருத்துவர்களின் ஆலோசனை சோதனை முயற்சியாக இருந்தாலும், அதனால் வெற்றி கிடைத்தால் உலகில் உள்ள பலரும் அதனை எளிமையாக மேற்கொண்டு உயிர் வாழலாம் என ரிக் கருதி இருக்கிறார். இதனையடுத்து, அவர் மருத்துவ சோதனைக்கு உறுதிகொடுத்துள்ளார். மருத்துவரின் ஆலோசனைப்படி, கடந்த மார்ச் மாதம் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. Maggie Kills Young Boy: அரிசி சாதத்துடன் மேகி சாப்பிட்டதால் நேர்ந்த சோகம்; குடும்பமே மருத்துவமனையில் அனுமதி.. 10 வயது சிறுவன் பலி.! 

அறுவை சிகிச்சை வெற்றி, நோயாளி மரணம் (Operation Success But Patient Death): தொடர்ந்து ரிக் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பன்றியின் சிறுநீரகத்தை ரிக்கின் உடலில் பொருத்துவதற்கு முன்பு, அது மனித உயிருக்கு தீங்கு ஏற்படுத்தாத வகையில், சிறந்த முறையில் செயலாற்றவும் மரபணு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட நான்கரை மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்கு பின்னர், ரிக் பன்றியின் சிறுநீரக பொருத்தப்பட்ட முதல் நபர் என்ற பெருமையையும் கொண்டார். அவரின் உடலநலம் தேறுவது போல தோன்றினாலும், இறுதியில் அவர் உயிரிழந்து இருக்கிறார். அவரின் சிறுநீரக செயலிழந்து உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை உறுதி செய்துள்ள மருத்துவமனை நிர்வாகம், அவரின் அர்பணிப்புக்கு பாராட்டி தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளது.