ஜூலை 21, புதுடெல்லி (Technology News): பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்சப், திரெட்ஸ் ஆகிய செயலிகள் மெட்டா நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. தனித்தனியே நிர்வாக அமைப்புகளை கொண்டிருந்தவை ஒரு அங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, பல்வேறு பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் மெட்டாவின் வாட்சப் செயலியை 2.24 மில்லியன் மக்கள் உபயோகம் செய்கின்றனர். பயனர்களின் தனியுரிமை விஷயத்தில் மிகுந்த கவனத்துடன் வாட்சப் இருப்பதால், அதனை பலரும் விரும்பி உபயோகம் செய்கின்றனர். தனது பயனர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு அம்சங்களும் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. UP Shocker: அம்மா, தங்கையை கொடூர கொலை செய்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர்; வீட்டுக்குள் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்.!
நேற்று முன்தினம் வாட்சப் செயலி சர்வதேச அளவில் முடங்கியது. இந்தியாவில் பல பயனர்கள் வாட்சப் முடங்கியதால் அவதிப்பட்டனர். இதனையடுத்து, ஒருமணிநேரத்திற்கு பின்னர் வாட்சப் நிறுவனம் தனது தரப்பு தொழில்நுட்ப கோளாறை சரி செய்தது. இதனால் பயனர்கள் மீண்டும் வாட்ஸப்பை உபயோகம் செய்ய தொடங்கினர்.
இந்நிலையில், நேற்று இரவு மற்றும் இன்று காலை என உலகளவில் வாட்சப் பயனர்கள் தங்களின் வாட்சப் கணக்குகள் முடங்கியதாக தெரிவித்து இருக்கின்றனர். சிலரால் தங்களின் முகப்பு படத்தை மாற்ற இயலவில்லை. வாட்சப் பிசினஸ் உபயோகம் செய்வோரும் சில பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர். இதனை சரி செய்யும் பணியில் வாட்சப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.