ஏப்ரல் 11, புதுடெல்லி (New Delhi): யூடியூப் (YouTube) செயலியை உலகளவில் 122 மில்லியன் மக்கள் தினமும் தொடர்ந்து உபயோகம் செய்கின்றனர். நாளொன்றுக்கு 500 மணிநேர விடியோக்கள் அதில் பதிவு செய்யப்படுகின்றன. நாளொன்றுக்கு மொத்தமாக 250 மில்லியன் பயனர்கள் குறைந்தபட்சம் ஒருமுறையாவது அதனை உபயோகம் செய்து வருகின்றனர்.
யூடியூபில் முதல் மற்றும் மூன்றாவது இடத்தில் இந்திய யூடியூப் சேனல்களான T-Series & Sony Entertainment India அதிக பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளனர். இரண்டாவது மற்றும் நான்காவது இடத்தில் அமெரிக்காவின் Cocomelon & MrBeast யூடியூப் சேனல்கள் பின்தொடர்பாளர்களை கொண்டுள்ளன. Thump Impression: சொத்துக்காக இப்படியெல்லாமா செய்வாங்க?.. உயிரிழந்த பெண்ணின் கைரேகையை எடுத்த அதிர்ச்சி சம்பவம்.!
உலகளவில் அதிக பயனர்களால் உபயோகம் செய்யப்படும் யூடியூபில், விடியோவை பதிவிட்டு பணம் சம்பாரித்து வரும் நபர்களும் இருக்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை சிலமணிநேரம் யூடியூப் உலகளவில் முடங்கிப்போனது. அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக சமூக வலைதளபக்கங்கள் முடங்குவது நடைபெறும்.
இன்று காலை 07:27 மணியளவில் திடீரென முடங்கிப்போன யூடியூப் காரணமாக அதன் உபயோகிப்பாளர்கள் விடீயோக்களை பதிவேற்ற இயலாமலும், பதிவேற்றிய விடீயோக்களை பார்வையிட இயலாமலும் திணறினர். பின்னர் அவை சரி செய்யப்பட்டன.