Arattai (Photo Credit : Official Website)

செப்டம்பர் 28, சென்னை (Technology News): இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிறுவனங்களில் ஒன்றான ஜோஹோ (Zoho), 'அரட்டை' எனும் தனது புதிய மெசேஜிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களிலும், இணையவேகம் குறைவாக இருந்தாலும் சிறப்பாக இயங்கும் வகையில் அரட்டை செயலியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜோஹோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு கூறுகையில், "அரட்டை செயலி குறைந்த செயல் திறன் கொண்ட மொபைல் போன்களிலும், மெதுவான இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும். சிறந்த மற்றும் குறைந்த செலவில் உள்ள தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே ஜோஹோ நிறுவனத்தின் முக்கிய நோக்கம்" என்று தெரிவித்தார்.

அரட்டை செயலி என்றால் என்ன(Arattai Messaging App) ?

இந்தியாவின் முன்னணி ஜோஹோ நிறுவனத்தின் புதிய தகவல் தொடர்பு செயலி அரட்டை ஆகும். அனைத்து பயனர்களுக்கும் பயனளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் மேம்பாடுகள் இல்லாத பகுதிகளிலும் இதனை உபயோகிக்கலாம். இந்த செயலியானது மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு 'மேட் இன் இந்தியா' (Made In India) என்ற சிறப்பை பெற்றுள்ளது. வாட்ஸ்அப்பை போல அல்லாமல் குறைந்த இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்குவதாக பலரும் தெரிவித்துள்ளனர். Accenture Layoffs: 11,000 ஊழியர்களின் வேலைக்கு ஆப்பு வைத்த முன்னணி நிறுவனம்.. ஊழியர்களுக்கு பேரிடி..!

அரட்டை செயலியின் முக்கிய அம்சங்கள் (Features of Arattai App) :

  • உரையாடல் :

அரட்டை செயலியை பொறுத்தவரையில் ஒரே நேரத்தில் ஒருவருடனும் அல்லது குழுவாக உரையாட அனுமதிக்கிறது. பயனர்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் வாய்ஸ் நோட்களை இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் பகிர இயலும். ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கும் குறைந்த அளவே இன்டர்நெட் உபயோகிக்கப்படும்.

  • ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்கள் பயன்பாடு :

அரட்டை செயலி ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ், லினக்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு டிவி போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட சாதனங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர்கள் ஒரே நேரத்தில் 5 சாதனங்களில் கூட இணைத்து தங்கள் தகவல்களை எளிதாக அணுகலாம்.

  • பயனர்களின் தனியுரிமை பாதுகாப்பு :

தனியுரிமை பாதுகாப்பை பொறுத்தவரையில் பயனர்களின் தகவல்களை பாதுகாப்பாக கையாளும் வகையில் உருவாக்கப்பட்டது. மேலும் இதனை உறுதிப்படுத்துவதற்காக ஆடியோ, வீடியோ அழைப்புகளுக்கு எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் (End-to-End Encryption) வழங்கப்பட்டுள்ளது. உரையாடல்களுக்கு முழுமையான பாதுகாப்பு அம்சம் செயல்படுத்தவில்லை என்றாலும் விரைவில் அதனையும் கொண்டுவரும் பொருட்டு தயாராகியுள்ளது.

  • குறைந்த வலையமைப்பு பயன்பாடு :

குறைந்த விலை கொண்ட சாதனங்களிலும், மெதுவான இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்டர்நெட் ஸ்பீட் குறைவாக இருக்கும் பகுதிகளிலும் பயனர்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை பகிர்ந்து உரையாடலாம்.

  • விரைவான அனுபவம் :

அரட்டை செயலியின் விரைவான லோடிங் நேரம், தொடர்பு கருவிகள் எளிதான மற்றும் விரைவான உரையாடல் அனுபவத்தைக் வழங்குகிறது.

அரட்டை செயலியின் எதிர்கால திட்டம் :

வாட்ஸ்அப், டெலிக்ராம் போன்ற செயலிகளுக்கு உயர்தர இணையவேகம் தேவைப்படுவதால் பயனர்களுக்கு சில சமயம் அது பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அரட்டை செயலியை உபயோகப்படுத்துவதன் மூலம் பயனர்களின் அனுபவத்தை எளிதாக்கலாம். மேலும் தங்களது எதிர்கால திட்டமாக உரையாடல்களுக்கும் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் (End-to-End Encryption) அம்சத்தை செயல்படுத்த தயாராகியுள்ளது. இதனால் விரைவில் வாட்ஸ்அப் போன்ற செயலிகளுக்கு போட்டியாக அரட்டை செயலியும் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரட்டை செயலி குறித்து ஸ்ரீதர்வேம்பு பதிவு :