Gurminder Singh Pet Dog England (Photo Credit: Twitter)

ஜூலை 17, லண்டன் (World News): இங்கிலாந்து நாட்டில் உள்ள மத்திய பகுதியான பர்மிங்காம் பகுதியில், இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்மிந்தர் சிங் (வயது 41) வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் செல்லப்பிராணியாக பெண் நாயை வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் கர்ப்பமாக இருந்த பெண் நாய், 7 குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குர்மிந்தர் சிங், நாய்க்குட்டையை குளிர்சாதன பெட்டியில் சங்கிலி வைத்து கட்டி உணவு போடாமல் துன்புறுத்தி இருக்கிறார்.

பசியால் தவித்த நாய் அவ்வப்போது குரைக்க, அக்கம் பக்கத்தில் வசித்து வந்தவர்கள் விலங்குகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் வந்து சோதித்தபோது நாய் சங்கிலியால் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். Sweet Potatoes: புற்றுநோயின் எதிரி, புறஊதா கதிர்களின் பாதிப்பையே கட்டுப்படுத்தும் சர்க்கரைவள்ளிக்கிழங்கின் நன்மைகள் தெரியுமா?..!

மேலும், அவைகளுக்கு உணவளிக்காமல் கொடுமை செய்ததும் உறுதியாக, அவர்கள் நாய்க்குட்டியை மீட்டு அங்குள்ள விலங்குகள் நல மையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். சுமார் 40 கிலோ எடை கொண்ட Presa Canario ரக நாய் 25 கிலோ மட்டுமே இருந்துள்ளது.

3 வாரங்களாகும் குட்டிகளுடன் உயிர்க்கு போராடிய நாய் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், செல்லப்பிராணியை பார்த்துக்கொள்ள தவறியதாகவும், அதனை துன்புறுத்தியதாகவும் குர்மிந்தர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வு கடந்த அக். 12ம் தேதி 2022 அன்று நடைபெற்றது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் குர்மிந்தர் சிங் 8 வார சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், 80 மணிநேரம் விலங்குகள் நல மையத்தில் இருக்கும் நாய்களை பராமரிக்க வேண்டும். 550 பௌண்ட்ஸ் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.