![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/07/Sweet-Potato-Photo-Credit-Pixabay-380x214.jpg)
ஜூலை 17, சென்னை (Health Tips): தமிழ்நாட்டில் தை-மாசி ஆகிய மாதங்களில் சர்க்கரைவள்ளிக்கிழங்கு பரவலாக கிடைக்கும். பிற காலத்திலும் ஒருசில இடங்களில் விளைச்சல் தருமே என்றாலும், தை-மாசி காலத்தில் கிடைக்கும் கிழங்குக்கு சத்துக்கள் அதிகம் என்று கூறப்படும். ஏனெனில் அவற்றின் பருவம் தை மற்றும் மாசி மாதங்களே ஆகும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கை சாப்பிட்டு வர உடலின் ஆரோக்கியம் அதிகமாகும். அதன் மாவுப்பகுதி இனிப்பு சுவையை மட்டுமல்லாது, உடலுக்கு தேவையான சத்துக்களை கொண்டுள்ளது. வைட்டமின் பி6 செரிமான கோளாறுகளை சரி செய்யும். இதய பாதிப்பை அண்டவிடாமல் உடலை பாதுகாக்கும்.
இரத்த அணுக்கள் உருவாக்கம், குளிர்காலத்தில் சரும பொலிவினை மேம்படுத்துதல், மன அழுத்தத்தில் இருந்து நம்மை பாதுகாத்தல் என பலவகையான விஷயங்களுக்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவி செய்கிறது. Actress Jane Birkin: பிரபல ஹாலிவுட் நடிகை, பாடகி 76 வயதில் இயற்கை எய்தினார்; சோகத்தில் ரசிகர்கள்., திரையுலகம் கண்ணீர் அஞ்சலி.!
இதில் இருக்கும் நார்சத்து உடலில் இருக்கும் தேவையில்லாத நச்சுக்களை வெளியேற்றும். வைட்டமின் டி நோயெதிர்ப்பு மண்டலத்தை சீராக்கும். எலும்புகள் செயல்பாட்டுக்கு உதவும். பற்கள், நரம்புகளையும் காக்கும்.
அதேபோல, வைட்டமின் ஏ ஆக்சிஜனேற்றியாக செயல்படுவதால் புற்றுநோய்களுக்கு எதிராக போராடும். சூரியனில் இருந்து வெளிப்படும் புறஊதா கதிர்களின் பாதிப்பையும் சரி செய்யும். இதனை வேகவைத்து அல்லது சிப்ஸ் போல தயாரித்து சாப்பிடலாம். இதனை அளவோடு சாப்பிடுவது நல்லது.