Pope Leo XIV: தேர்வு செய்யப்பட்டார் 267 வது போப் ஆண்டவர்.. யார் இந்த போப் லியோ XIV?.. விபரம் இதோ.!
வாடிகன் நகரின் புதிய தலைவராகவும், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராகவும் போப் லியோ XIV (Pope Leo XIV) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மே 9, வாடிகன் (World News): உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும், வாடிகன் நகர தலைவருமான போப் பிரான்சிஸ் சமீபத்தில் மரணம் அடைந்தார். அதனைத்தொடர்ந்து, மறைமுகமாக நடந்த கூட்டத்தின் அடிப்படையில் புதிய போப் பிரான்சிசாக ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இனி போப் லியோ XIV (14 வது போப் லியோ) எனவும் அழைக்கப்படுவார். ஏப்ரல் 22ம் தேதி போப் பிரான்சிஸ் காலமான நிலையில், அடுத்த போப்பை தேர்வு செய்யும் பணிகள் வாடிகனில் இருக்கும் கார்டினால் சிஸ்டைன் தேவாலயத்தில் பாரம்பரியபடி ரகசியமாக நடந்தது. Operation Sindoor: பஞ்சாப்பில் ஏவுகணை வீசி தாக்குதல்.. எல்லையில் அதிகரிக்கும் போர் பதற்றம்.., பாகிஸ்தான் அத்துமீறல்..!
புதிய போப் ஆண்டவர் தேர்வு:
இந்த நிகழ்ச்சிக்காக உலகளவில் இருக்கும் 250 கார்டினல்கள் வாடிகனுக்கு வந்தனர். போப் தேர்தலில் வாக்களிக்க 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தகுதி என்ற அடிப்படையில் 133 பேர் வாக்களிக்க தேர்வு செய்யப்பட்டனர். முதலில் நடைபெற்ற கூட்டத்தில் போப் தேர்வு செய்யப்படாமல் கரும்புகை வெளியேறியது. அதனைத்தொடர்ந்து, 2 வது முறையாக கூட்டம் கூடி போப் தேர்வு செய்யப்பட்டார். இதனை உறுதி செய்யும் பொருட்டு வெண்புகையும் வெளியேறியது. இதனால் தேவாலயத்தில் குழுமியிருந்த மக்கள் ஆரவாரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.
யார் இந்த ரப்பர் பிரிவோஸ்ட்:
அமெரிக்காவைச் சேர்ந்த முதல் போப் ஆண்டவர் லியோ XIV, செயிண்ட்ஸ் பீட்டஸ் பால்கனியில் தோன்றி மக்களிடம் உரையாற்றினார். பிரெஞ்சு-இத்தாலிய வம்சாவளியான 69 நபர் ராபர்ட், கடந்த 1995 செப்டம்பர் 14 அன்று சிகாகோவில் பிறந்தார். கடந்த 2023 ல் முதல் ஆயர்களுக்கான டிகாஸ்டரி தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் தற்போது போப் ஆண்டவராக தேர்வாகியுள்ளார். பல ஆண்டுகளாக மிஷினரி, பிஷப், கார்டினல் ஆகிய பொறுப்புகளிலும் லியோ இருந்துள்ளார்.
போப் லியோ மக்களுக்கு காட்சி தந்த காணொளி:
#WATCH | Pope Leo XIV Cardinal Robert Francis Prevost appears on the balcony of St. Peter's Basilica to greet the faithful for the first time as the 267th Pope: Vatican News
(Source: Vatican News) https://t.co/My4AqWOjfN pic.twitter.com/o9YGG2mOg2
— ANI (@ANI) May 8, 2025
(The above story first appeared on LatestLY on May 09, 2025 08:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

