
மே 12, ஆப்கானிஸ்தான் (World News): கடந்த 2021 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்களின் கல்வி, வேலை வாய்ப்பு, சுதந்திரம் உள்ளிட்டவை பாதுகாக்கப்படும் என்றும், சர்வதேச நாடுகளுடன் நல்ல உறவு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்த நிலையில், அதற்கு மாறாக பெண்களின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தனர்.
பெண்கள் மீது கடுமையான கட்டுப்பாடு :
இதனை தொடர்ந்து நெருங்கிய ஆண் உறவினருடன் வெளியே செல்லக்கூடாது, முகத்தை மறைத்தே பொதுவெளியில் செல்ல வேண்டும் எனவும் தடை விதித்தது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், சமையலறை மற்றும் வீட்டின் பிற பகுதிகளில் பெண்கள் இருப்பது வெளியே தெரிந்தாலும் அது தவறான நோக்கத்தையே தூண்டும் என்பதற்காக ஜன்னல் அமைப்பதற்கும் தடை விதித்தது. Tibet Earthquake: திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவு..!
சதுரங்க விளையாட்டிற்கு தடை :
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் தற்போது சதுரங்க விளையாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டானது சூதாட்டத்திற்கு இணையானது என்றும், இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் அடிப்படையில் நன்மையை ஊக்குவித்து, தீமையை தடுக்கும் சட்டகட்டமைப்பின் கீழ் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் விளையாட்டு இயக்குனராக செய்தி தொடர்பாளர் அடல் மஸ்வானி கூறியுள்ளார். மேலும் சதுரங்க விளையாட்டை மதரீதியாக எதிர்க்கும் கருத்துகள் இருப்பதால் அவற்றை தெளிவுபடுத்தும் வரை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.