
ஜூன் 5, வாஷிங்க்டன் டிசி (World News Tamil): சர்வதேச அளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் நாடுகள் என்ற எல்லையை கடந்து நடந்து வருகிறது. குறிப்பாக ஆப்ரிக்காவில் உள்ள பெரும்பாலான நாடுகள் அதிக பயங்கரவாத சேதத்தை எதிர்கொண்டு வருகிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகம் முன்னெடுக்கப்படுகின்றன. இது பிற நாடுகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுவதால் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் பலகட்ட முயற்சிகளை எடுத்து வருகின்றன. Pakisthan: நிலநடுக்கத்தால் 216 கைதிகள் தப்பியோட்டம்.. சிறைக்குள் கலவரம்.!
அதிரடி காட்டிய ட்ரம்ப்:
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிராப் 12 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் தடை விதிக்கப்பட்ட 12 நாட்டைச் சேர்ந்த மக்கள் சுற்றுலா, கல்வி உட்பட எந்த விஷயத்தை மேற்கோளிட்டும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாது. பிற நாடுகளில் அதிகரித்து இருந்த பயங்கரவாத தாக்குதல்கள், அமெரிக்காவுக்குள் சிறுசிறு அளவில் நடக்க தொடங்கியதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக விசாவை டிரம்ப் ரத்து செய்துள்ளார்.
அமெரிக்க விசா கெடுபிடி:
அதன்படி, ஆப்கானிஸ்தான் , ஈரான், காங்கோ, லிபியா, மியான்மர், சாட், சோமாலியா, ஹேதி, சூடான், ஏமன் ஆகிய நாடுகள் அதிகம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபடும் நாடுகளாக கருதப்படுகிறது. அங்கு நிலவும் உள்நாட்டு பிரச்சனை உட்பட பல காரணத்தால் பயங்கரவாத செயல்கள் அங்கு அதிகம் நடக்கின்றன. இதனால் அந்நாட்டவருக்கு விசா வாங்கும் நடைமுறை ரத்து செய்யப்படுகிறது. கியூபா, வெனிசுலா, புருண்டி, லாவோஸ், சிரா லியோன், டோகோ, துர்மேகிஸ்தான் நாடுகளின் மக்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூன் 9, 2025 முதல் (4 நாட்களில்) நடைமுறைக்கு வருகிறது.