India & America National Flag (Photo Credit: Wikipedia Commons)

ஜூலை 10, நியூயார்க் (Goldman Sachs): அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனம் Goldman Sachs. இந்நிறுவனம் உலகின் இரண்டாவது பெரிய முதலீட்டு வங்கியாகும். லண்டன், வார்சா, பெங்களூர், ஹாங்காங், டோக்கியோ, டல்லாஸ் ஆகிய நகரங்களில் இந்நிறுவனத்திற்கு கிளைகளும் இருக்கின்றன. இந்நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வின்படி, 2075ல் உலகில் தலைசிறந்த பொருளாதார நாடுகளில் இந்தியா 2ம் இடத்தை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்டிருக்கும் ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி இந்தியா இரண்டாவது இடத்திற்கு செல்லும். கோல்ட்மேன் சாக்ஸ் இந்தியாவின் மக்கள் தொகை, தொழில்நுட்ப புதுமை, முன்னேற்றம், மூலதன முதலீடு, தொழிலாளர் உற்பத்தி திறன் அதிகரிப்பு, வேலைவாய்ப்பு, உற்பத்தி சேவைத்திறன் போன்ற பல்வேறு விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Threads 100 Million: 100 மில்லியன் பயனர்களை விரைந்து தன்வசப்படுத்திய திரெட்ஸ்; சாட் ஜிபிடி-க்கே டப் கொடுத்து மாஸ் சம்பவம்.!

India GDP Lovel Projection 2075 (Photo Credit: Twitter)

இந்தியா தற்போது முதலீடு செய்யும் வளர்ந்து வரும் நாடுகளில் இருக்கும் நிலையில், விரைவில் உலகில் செல்வாக்கான நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மேம்பட்ட வணிகம், அரசியல் ஸ்திரத்தன்மை, சாதகமான புள்ளவிபரம், முதலீட்டாளர்களுக்கான சூழல் போன்றவற்றால் எதிர்காலத்தில் இந்தியாவின் வணிகம் என்பது அதிகரிக்கும் என்றும் காட்மேன் சாக்ஸ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, 2075-ம் ஆண்டுக்குள் அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிதி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய அரசு எதிர்காலத்திற்காக அமல்படுத்தியுள்ள திட்டங்கள் பின்னாட்களில் பலன் கொடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.