
மே 30, பிரான்ஸ் (World News): சர்வதேச அளவில் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான குற்றங்களில் சிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் மருத்துவரின் கொடூர செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேற்கு பிரான்சில் வசித்து வருபவர் ஜோயல் (வயது 74). அரசு மருத்துவராக பணியாற்றி வந்த ஜோயல், தனது பணிக்காலத்தில் 250க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் கொடுமை செய்திருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.
மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர் :
தற்போது அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் நல மருத்துவராகவும், அறுவை சிகிச்சை நிபுணராகவும் கடந்த 1989 முதல் 2014 வரை பணியாற்றியவர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 15 வயதுட்பட்ட 256 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மொத்தமாக 300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவர், குழந்தைகளுக்கு மயக்க மருந்து கொடுத்து இந்த கொடுமையை அரங்கேற்றி இருக்கிறார். Trending Video: தப்பான அட்ரஸ் கொடுப்பியா?.. வாடிக்கையாரை வெளுத்த டெலிவரி பாய்.. எலும்பு முறிந்து மருத்துவமனையில் அட்மிட்.!
20 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம் :
கடந்த 2010 ஆம் ஆண்டு பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர், கடந்த 15 ஆண்டுகளாக பாரிஸில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். தற்போது விசாரணை அனைத்தும் நிறைவு பெற்றுவிட்ட நிலையில், நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.