
ஜூன் 07, காசா (World News Tamil): இஸ்ரேல் நாட்டின் மீது பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த ஆயுதமேந்திய பயங்கரவாத குழு, கடந்த 7 அக்டோபர் 2023 அன்று திடீர் தாக்குதலை முஎடுத்து. இஸ்ரேல் எல்லையை கடந்து அத்துமீறிச் சென்ற பாலஸ்தீனிய பயங்கரவாதிகள், 1500 இஸ்ரேலியர்களை கொடூரமாக கொலை செய்தனர். மக்களின் வீட்டுக்குள் புகுந்து தலை துண்டித்து கொலை சம்பவம் நடத்தப்பட்டது. இஸ்ரேல் (Israel Palestine War) நாட்டின் மீது ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. திடீர் தாக்குதலை நினைத்தும் பார்க்காத இஸ்ரேல் போரில் களமிறங்கியதும் நிலைமை தலைகீழானது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கும் இஸ்ரேல் பாலஸ்தீனியம் போரின் மறுபக்கத்தில், பாலஸ்தீனியம் என்ற நாடு எண்ணிப்பார்க்க இயலாத அளவு பதில் தாக்குதல் நடந்து வருகிறது.
இந்தியா மனிதாபிமான உதவி:
பாலஸ்தீனியத்தில் உள்ள காசா நகரின் மீதும், அங்குள்ள மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் இதுவரை 55,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலின் போர் தீவிரம் ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை நிறுத்தப்போவதில்லை என இஸ்ரேலிய அரசு திட்டவட்டமாக தெரிவித்து போரை முன்னெடுத்து வருகிறது. ஹமாஸ் அமைப்பின் முக்கியத்தலைவர்கள் பிற நாடுகளிலும் கொல்லப்பட்டனர். மத்திய கிழக்கு நாடுகளில் இதனால் 2 ஆண்டுகளாக பதற்ற சூழல் நீடித்து வருகிறது. ஐ.நா அமைப்பு, அமெரிக்கா, அமீரகத்தின் தலையீடு காரணமாக அவ்வப்போது அமைதி பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிய ஐ.நா இந்தியா உட்பட உலக நாடுகளின் உதவியுடன் செய்து வருகிறது. Corona Cases in India: மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. யாரை குறிவைக்கிறது? தற்காத்துக்கொள்வது எப்படி?. மருத்துவர்களின் விளக்கம் இதோ.!
விலைவாசி கடும் உயர்வு:
அடுத்தடுத்த தாக்குதலால் ஒருபக்கம் மக்களின் உயிரிழப்பு, மற்றொரு பக்கம் பிழைப்பைத்தேடி அண்டை நாடுகளுக்கு அகதியாக இடம்பெறும் மக்கள் என காசாவில் சோகங்கள் தொடருகிறது. ஒருசில நேரம் இஸ்ரேல் இராணுவம் காஸாவுக்குள் உலக நாடுகள் அனுப்பும் மனிதாபிமான உதவிகளை அனுப்பவும் முட்டுக்கட்டை போடுகிறது. இதனால் கிடைத்த உணவை சாப்பிட்டு பசி, பஞ்சம், பட்டினி, பேரழிவு என மக்கள் தவிக்கின்றனர். மற்றொருபக்கம், இந்த நிலைமையை கருத்தில் கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலைவாசியும் உயர்ந்துள்ளது. கள்ளச்சந்தையில் பொருட்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுகிறது.
பார்லேஜி பிஸ்கட் விலை (Parle G Biscuit Price In Gaza):
இந்தியாவில் ரூ.5 க்கு விற்பனை செய்யப்படும் பார்லேஜி பிஸ்கட்டின் விலை காசாவில் ரூ.2,400 ஆகும். சர்க்கரை ரூ.4.900 க்கும், சமையல் எண்ணெய் லிட்டர் ரூ.4,100 க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.1,900 க்கும், வெங்காயம் கிலோ ரூ.4,400 க்கும், காபி / டீ ரூ.1,800 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காசாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்த தகவலால் அங்கு நடக்கும் உணவுப்பஞ்சம் மற்றும் மோசடி குறித்த விஷயம் அம்பலமானது. அதாவது, இந்தியாவில் ரூ.5 மதிப்புள்ள பிஸ்கட் காசாவில் 24 யூரோ டாலர் (€24) மதிப்புக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, இந்திய மதிப்பில் ஒரு பிஸ்கட்டின் இன்றைய விலை ரூ.2,400 ஆகும்.
பார்லேஜி பிஸ்கட் விலை ரூ.2,400 (Parle G Biscuit Price):
SHOCKING 🚨 Parle-G, the world’s largest-selling biscuit, is reportedly being sold for €24 (₹2,785) per packet in Gaza.pic.twitter.com/ewCH8mgxZl
— Times Algebra () June 6, 2025