
ஜூன் 02, ஜெருசலேம் (World news): இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நடந்து வரும் போரை கைவிட வேண்டும் என உலக நாடுகள் இஸ்ரேலுக்கு பல கோரிக்கைகளை முன் வைத்தாலும், தங்களின் மீது தாக்குதல் நடத்திய ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை எங்களது தாக்குதல் தொடரும் என திட்டவட்டமாக அறிவித்து விட்டது. இதனால் காசாவில் வாழும் அப்பாவி பொதுமக்களும் தாக்குதலின் பெயரில் கொல்லப்பட்டு வருகின்றனர்.
ராணுவத்தின் பிடியில் மக்கள் :
காசாவில் வசித்து வரும் மக்களுக்கு உலக நாடுகள் முன்வந்து அடிப்படை உதவிகள் செய்து வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவம் அதையும் தடுத்து நிறுத்தி வருகிறது. ஐ.நா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் பேரில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. Train Accident: ரயில் தண்டவாளத்தில் இடிந்து விழுந்த பாலம்.. 7 பேர் பலி., 70 பேர் படுகாயம்.!
உணவுக்காக சென்ற 25 பேர் சுட்டுக்கொலை :
இந்நிலையில் பசியால் துடித்த மக்கள் உணவுக்காக ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் 25 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சோகம் நடந்துள்ளது. இன்று அதிகாலை நேரத்தில் இஸ்ரேல் ஆதரவு அறக்கட்டளை நடத்தி வரும் உதவி விநியோக மையத்திற்கு மக்கள் பலரும் உணவு வாங்க வந்திருந்தனர். அப்போது கூட்டமாக மக்கள் வந்த நிலையில், இஸ்ரேலிய ராணுவம் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிசூடு :
இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளனர். உணவு விநியோகம் தொடர்பான தகவலறிந்து மக்கள் சில மணி நேரத்திற்கு முன்னதாகவே அங்கு வந்ததால் இஸ்ரேல் ராணுவம் கலைந்து செல்ல உத்தரவிட்டுள்ளது. ஆனால் மக்கள் அதனை கண்டுகொள்ளாத நிலையில், இஸ்ரேல் ராணுவம் இந்த தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது.