ஜூன் 01, ரஷ்யா (World News): ரஷ்யாவில் உள்ள பெல்கொரோட் மாகாணம் கிளிமொவ் நகரத்தில் இருந்து, தலைநகர் மாஸ்கோ நோக்கி பயணிகள் ரயில் ஒன்று இன்று பயணம் செய்து கொண்டிருந்தது. இந்த ரயில் பிராயன்ஸ்க் மாகாணத்தில் பில்ஷினோ, வைக்கோன்சி ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது பாலம் திடீரென இடிந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் மேம்பாலத்தின் இடிபாடுகள் மற்றும் பிற ராட்சத கற்கள் தண்டவாளத்தில் சரிந்து கிடந்தன.

கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த ரயில் :

அந்த சமயத்தில் ரயில் வேகமாக வந்த நிலையில், இடிபாடுகளில் மீது மோதிய ரயில் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ரயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ரயிலின் ஓட்டுனர் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மருத்துவர் செய்யும் வேலையா இது?.. மயக்க மருந்து கொடுத்து 256 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை.! 

கிட்டத்தட்ட 70 பேர் மருத்துவமனையில் அனுமதி :

மேலும் 70 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது. உக்ரைன் எல்லைக்கும், விபத்து நடந்த பகுதிக்கும் 100 கிலோமீட்டர் தொலைவு என்பதால் உக்ரைன் நாட்டின் தலையீடு உள்ளதா? எனவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

ரயில் விபத்து குறித்த வீடியோ :