ஜூன் 04, பாகிஸ்தான் (World News): பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்தின் கராச்சி நகரில் மாலிர் மத்திய சிறை செயல்பட்டு வருகிறது. இந்த சிறையில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என 6000க்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த சிறையில் 100க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று சிறையில் 3 முறை அடுத்தடுத்து குறைந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிய வருகிறது. இதனால் கைதிகளை வேறொரு இடத்திற்கு பாதுகாப்பாக அகற்ற முயற்சிகள் நடைபெற்று வந்தன.

நிலநடுக்கத்தால் தப்பியோடிய கைதிகள் :

அப்போது அங்கிருந்து தப்பிச்செல்லும் முயற்சியில் சில கைதிகள் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், சிறையின் கதவுகளை உடைத்துக் கொண்டு அங்கிருந்து பலரும் வெளியே தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு வன்முறையும் ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் 216 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் மற்றும் கைதிகள் பலரும் காயமடைந்தும் இருக்கின்றனர். Kamal Hassan: மன்னிப்பு கேட்க முடியாது., வெளியீட்டை தள்ளிவைக்கிறேன்.. கமல் தடாலடி.

உள்ளூர் மக்களிடையே பதற்றம் :

காவல்துறையினரால் தப்பியோட முயன்ற ஒரு கைதி சுட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் தப்பியோடிய கைதிகளில் 78 பேரை அதிகாரிகள் கைது செய்த நிலையில், 135 பேரை தேடி வருகின்றனர். இவர்கள் கொடூர குற்ற செயலில் ஈடுபட்ட கைதிகள் என்றும் கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களிடையே பதற்ற சூழலும் அதிகரித்து வருகிறது. மேலும் சிறை கைதிகளை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள், கைதிகள் தாமாக முன்வந்து மீண்டும் சிறைக்கு வந்தால் தண்டனையை குறைக்கும் விஷயம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் தப்பியோடியது தொடர்பான வீடியோ :