Crime Scene File Pic (Photo Credit: Pixabay)

மார்ச் 20, சாண்டா அனா (World News): அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணம், சாண்டா அனா, லா குயிண்டா இன் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு எலிசா வித்தேரல் (Elisa Witherell) என்ற 48 வயது பெண்மணி அறையெடுத்து தங்கியுள்ளார். இவருடன், பெண்ணின் 11 வயது மகனும் இருந்துள்ளார். கடந்த 2 வாரமாக இவர்கள் விடுதி அறையிலேயே தங்கி இருந்த நிலையில், நேற்று நள்ளிரவு நேரத்தில் பெண் அவசர அழைப்புக்கு தொடர்புகொண்டு இருக்கிறார். Sunita Williams Return: வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்.. சாதனை படைத்த நாசா..! 

மகன் குத்திக்கொலை:

அவசர அழைப்பை எடுத்த அதிகாரியிடம், தான் 11 வயது மகனை கொலை செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். இதனைக்கேட்ட அதிகாரி, உடனடியாக நிகழ்விடத்திற்கு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்று பெண் கூறிய அறையில் பார்த்தபோது, 11 வயது சிறுவன் கத்திகுத்துப்பட்டு சடலமாக இருந்தார். அவரை கொலை செய்த தாய் அங்கேயே இருந்த நிலையில், அவரை கைது செய்த அதிகாரிகள், காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 11 வயது சிறுவனின் உடல் அதிகாரிகளால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.