Canada US Officials about Indian Family Drowned Issue (Photo Credit: IANS)

ஏப்ரல் 01, கனடா: அமெரிக்காவுக்குள் (America) குடியேற நினைக்கும் மக்கள் உலகளவில் கோடிக்கணக்கில் இருந்து வருகின்றனர். இவர்களில் சிலர் சட்டவிரோத (Illegal Activity) வழிகளை தேர்வு செய்து, ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு அமெரிக்காவில் குடியேறவும் முயற்சி செய்கின்றனர்.

இவ்வகையான முயற்சி ஒருசில நேரங்களில், அதன் ஆபத்து வாய்ந்த பகுதிகளின் காரணமாக உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே கனடா (Canada America Border) எல்லையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் காரில் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். CSK Vs GT… சென்னை சிங்கங்களுக்கு சரியான போட்டியாளர்கள்.. ஐ.பி.எல் முதல் ஆட்டத்தின் வெற்றி யாருக்கு?.. முழு விபரம் உள்ளே.!

இந்த நிலையில், கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற இந்தியா மற்றும் ரோமானியா (India & Romanian Family) நாட்டினை சேர்ந்த 2 குடும்பத்தினர், கனடாவின் செயின்ட் லாரன்ஸ் ஆறு வழியே அகதியாக படகில் அமெரிக்காவுக்குள் நுழைய முயற்சி சீய்த்துள்ளனர்.

அந்த சமயம் இவர்கள் பயணித்த படகு எதிர்பாராத விதமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இந்த துயர சம்பவத்தில் இந்திய குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தையை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.