Pahalgam Terror Attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர்..!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இந்திய வம்சாவளியினர் அமெரிக்கா, பிரான்சில் போராட்டம் நடத்தினர்.

Pahalgam Terror Attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்; போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியினர்..!
Indian Origin Protest against Pahalgam Terror Attack in Paris (Photo Credit: @TheRealDharm X)

ஏப்ரல் 28, பாரிஸ் (World News): ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் (Pahalgam Terrorist Attack) பகுதியில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு, இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. Pahalgam Terror Attack: மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தால் பயங்கரவாதத்துக்கு ஊக்கம் - பாக். பாதுகாப்புத்துறை அமைச்சர் ஷாக் தகவல்.. அதிர்ச்சியில் உலகநாடுகள்.!

இந்திய வம்சாவளியினர் போராட்டம்:

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்திற்கு முன்னால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய வம்சாவளியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, ''பாகிஸ்தானுக்கு அதன் சொந்த மொழியில் பதில் தர வேண்டும்'' என்று கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்திய தேசியக்கொடியை கையில் வைத்துக் கொண்டு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். மேலும், அமெரிக்கா நாட்டில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை முன்பு இந்திய வம்சாவளியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ இதோ:

(The above story first appeared on LatestLY on Apr 28, 2025 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).