Indian Student Dies In Canada: 3 நாட்கள் முன் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக மீட்பு..!

கனடாவில் 3 நாட்கள் முன் காணாமல் போன இந்திய மாணவி, கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Indian Student Dies In Canada: 3 நாட்கள் முன் காணாமல் போன இந்திய மாணவி சடலமாக மீட்பு..!
Indian Student Found Dead in Canada (Photo Credit: @NDTVWORLD X)

ஏப்ரல் 29, ஒட்டாவா (World News): இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தேராபாசி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தவிந்தர் சைனி. இவரது மகள் வன்ஷிகா (வயது 21), கனடாவில் (Canada) உள்ள ஒட்டாவா நகரில் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி, இவர் திடீரென மாயமானார். அவரின் செல்போனும் தொடர்புகொள்ள முடியவில்லை. வாடகைக்கு வீடு பார்க்க சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை. காணாமல் போன அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். Hashim Musa: பாகிஸ்தான் ராணுவத்தில் பணி.. பஹல்கம் தாக்குதல் பயங்கரவாதி குறித்து அதிர்ச்சி தகவல்.!

இந்திய மாணவி மர்ம மரணம்:

இந்நிலையில், மாணவி வன்ஷிகாவின் உடல் கல்லூரி அருகில் உள்ள கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை தூதரகமும் உறுதிப்படுத்தியுள்ளது. மாணவி உயிரிழந்த விவகாரத்தில் சந்தேகம் எழுத்துள்ளது. இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், உடலை இந்தியா அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(The above story first appeared on LatestLY on Apr 29, 2025 11:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).