மார்ச் 20, இலண்டன் (England News): பிரிட்டிஷ் (British Empire) ஆட்சியின் முடிவுக்கட்டத்தின் போது ஒருங்கிணைந்த இந்தியா அடுத்தடுத்த காலகட்டத்தில் இந்தியா (India), நேபாளம் (Nepal), வங்காளதேசம் (Bangladesh), பாகிஸ்தான் (Pakistan), ஆப்கானிஸ்தான் (Afghanistan), மியான்மர் (Myanmar) என பல நாடுகளாக பிரிக்கப்பட்டன. அப்போது, காலிஸ்தான் (Khalistan) என்ற நாடு தொடர்பான முழக்கமும் இருந்தது. ஆனால், அவை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில், தற்போது மீண்டும் காலிஸ்தான் தொடர்பான சர்ச்சை அதிகரித்து, அந்த அமைப்பை சேர்ந்தோர் இந்தியாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் உள்ள இலண்டனில் (London) இருக்கும் இந்திய அலுவலகத்தில் ஏற்றியிருந்த கொடியை காலிஸ்தானிய ஆதரவாளர்கள் இறக்க முயற்சிக்க, இந்திய பாதுகாப்புப்படை அதிகாரி அவர்களிடம் இருந்து இந்திய கொடியை பத்திரமாக மீட்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Army Helicopter Crash: அதிகாரிகள் பயணித்த இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து; 4 இராணுவ அதிகாரிகள் பரிதாப பலி.!
#WATCH | United Kingdom: Khalistani elements attempt to pull down the Indian flag but the flag was rescued by Indian security personnel at the High Commission of India, London.
(Source: MATV, London)
(Note: Abusive language at the end) pic.twitter.com/QP30v6q2G0
— ANI (@ANI) March 19, 2023
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)