மே 29, அமெரிக்கா (Lifestyle News): திருமணமான தம்பதிகள் தங்களது துணையை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. அவர்கள் வேறொருவருடன் மறைமுக உறவு கொண்டுள்ளாரா? அல்லது அதற்கான ஆசையை வைத்துள்ளாரா?. அதற்கான காரணம் என்ன உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வில் திருமணம் முடிந்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா?. அவர்களிடம் குறைகள் உள்ளனவா?. திருமண உறவு பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் கேட்கப்பட்டன. ஆய்வுகளை மேற்கொள்ள Ashley Madison இணையத்தில் கணக்கு வைத்திருந்தோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
திருமணத்திற்கு புறம்பான உறவுகளை பொறுத்தமட்டில் ஊடகம், தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படம், புத்தகம் ஆகியவை மூலமாக பல விஷயங்களை தெரிந்துகொண்டு, அவர்கள் சில முயற்சிகளில் இறங்கியதும் ஒப்புக்கொண்டனர். இவ்வாறான உறவுகளை கொண்டுள்ளார் திருப்தியான உணர்வை பெற்றுள்ளார்கள்.
உறவுகள், ஈர்ப்பு, உளவியல், மூளை அறிவியல் போன்றவற்றின் தரவுகளை பார்க்கையில் சாதாரண நிலையில் உள்ளோர்களிடம் உணர்ச்சி திருப்தி, வருத்தம் குறைவாக இருந்துள்ளது. துரோகத்தின் நிலையில் இருப்பவர்களுக்கு உணரவு திருப்தி இருந்தாலும், அதற்கு அடுத்த பிரச்சனையை எண்ணி மனஉளைச்சலை சந்தித்துள்ளனர். Same-Sex Relationship Banned: ஓரினசேர்க்கை, LGBTQ ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை – நிறைவேறியது சட்டம்; கையெழுத்திட்ட பிரதமர்.!
நடுத்தர வயது கொண்ட ஆண்கள், தங்களின் கூட்டாளிகள் மீது அதிக அன்பு கொண்டாலும், பாலியல் திருப்தி என்பது பாதியளவே இருக்கிறது. அன்பு என்பது தேவையான அளவு அல்லது தேவைக்கு மிகுதியாக கொடுக்கப்பட்டாலும், பாலியல் ரீதியான சுறுசுறுப்பு தம்பதிகளில் ஒருவருக்கு வெளிப்புற நட்பை தேட காரணியாக அமைகிறது என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
இதில் மனைவியுடன் காதல் இல்லாதது, கோபம் கொள்வது போன்ற காரணங்களால் வெளிப்புற நட்பை தேடுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பாலியல் ரீதியாக - உணர்ச்சி ரீதியாக திருப்தியாக இருப்போர் அல்லது கிடைப்பதை மனதார ஏற்போர், அவற்றை பற்றி கவலைகொள்வதில்லை.
உறவுகளை பொறுத்தமட்டில் துரோகம் என்பது மிகப்பெரிய சிக்கலான விஷயம் ஆகும். தம்பதிகள் புதுமையான, பரபரப்பான பாலியல் அனுபவத்தை விருப்பினால், அதனை மற்றொரு துணை நிறைவேற்ற வேண்டும். அர்ப்பணிப்பை உணராத விஷயத்தில் பிரச்சனை தொடங்குகிறது. திருமணத்திற்க்கு புறம்பான டேட்டிங் செயலிகளை பொறுத்தமட்டில், அவை 2 மில்லியன் இந்தியர்களை கொண்டுள்ளது.
பாலியல் தனித்தன்மையை மக்கள் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பது கடினம் என்றாலும், 50 ஆண்டுகளுக்கு ஒருவரோடு உடலுறவு கொள்வதை முழு திருப்தி அடைய மக்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் தோல்வி அடைகிறார்கள். அவரவரின் எண்ணத்தை பொறுத்து சில அமையும்.